“தி எகனாமிஸ்ட்” வெளியிட்ட கார்டூனை எடிட் செய்து பரப்பும் ஸ்ரீராம் சேஷாத்ரி !

பரவிய செய்தி

இந்தியாவிற்கான நேரம், பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது – தி எகனாமிஸ்ட்

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

” தி எகனாமிஸ்ட் ” எனும் பத்திரிகை ” பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது ” என பழைய வாகனங்களுக்கு மேலே பிரதமர் மோடி எலெக்ட்ரிக் வாகனத்தில் பரப்பது போன்ற கார்டூனை வெளியிட்டு இருப்பதாக பாஜக ஆதரவாளர் ஸ்ரீராம் சேஷாத்ரி என்பவர் ட்விட்டர் பக்கத்தில், ” நம்ம D Stock கதறல்கள் அதிகமாகுமே, இடது சாரி பத்திரிகை ஆன “The Economist” கூட சங்கி பத்திரிகை ஆனா எங்களுக்கு போக்கிடம் ” என பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

ஸ்ரீராம் சேஷாத்ரி என்பவர் பகிர்ந்த கார்டூன் செய்தியை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” மே 12-ம் தேதி தி எகனாமிஸ்ட் வெளியிட்ட உண்மையான செய்தி கிடைத்தது.

Archive link 

தி எகனாமிஸ்ட் பத்திரிகை, ” விதி, மரபு மற்றும் நடைமுறை முடிவுகள் இந்தியாவிற்கு வரும் வருடங்களில் ஒரு புதிய வாய்ப்பு உருவாகி உள்ளது. வீண்விரயம் செய்வதா இல்லையா என்பது நரேந்திர மோடியின் கையில் உள்ளது ” எனக் கூறி “இந்தியாவிற்கான நேரம், மோடி ஊதி தள்ளுவாரா ? என இடம்பெற்ற கார்டூனை வெளியிட்டு இருக்கிறது.

தி எகனாமிஸ்ட் பிரதமர் மோடி பற்றி “india moment will modi blow it? ” என வெளியிட்ட கார்டூனில் ” india moment world has great faith in pm modi ” என போலியாக எடிட் செய்து தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், தி எகனாமிஸ்ட் எனும் பத்திரிகை பிரதமர் மோடி மீது உலகம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என வெளியிட்டதாகப் பரப்பப்படும் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button