This article is from Mar 15, 2022

“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அழுததாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

காஷ்மீர் கோப்புகள் திரைப்படத்தை பார்த்து அழுத யோகி ஜி.

facebook link 

மதிப்பீடு

விளக்கம்

சமீபத்தில் வெளியான ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் ” திரைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழுததாக 17 நொடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

நிகழ்ச்சி ஒன்றை அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் கண்ணீர் விடும் காட்சி குறித்து கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடுகையில், 2017 அக்டோபர் மாதம் பஞ்சாப் கேசரி எனும் இணையதளத்தில், வீடியோவில் இருக்கும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

2017 அக்டோபர் மாதம் கோரக்பூரில் தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட போது கண்ணீர் விட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

தி காஷ்மீர் ஃபைல் திரைப்படத்திற்கு திரிபுரா, குஜராத், ஹரியானா, அசாம் போல உத்திரப்பிரதேச மாநிலத்திலும் வரி விலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருக்கிறார். ஆனால், யோகி ஆதித்யநாத் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து அழுததாக செய்திகளோ அல்லது படங்களோ வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அழுததாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader