தேவர் சமூகம் பற்றி கே.பி. முனுசாமி, பழனிச்சாமி கூறியதாக பரவும் போலி செய்திகள் !

பரவிய செய்தி
வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக் குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். உள் ஒதுக்கீடு என்பது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் – கே.பி.முனுசாமி (அ.தி.மு.க)
முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் – எடப்பாடி பழனிச்சாமி.
மதிப்பீடு
விளக்கம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்பில்லை 10.5% உள்ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது.
இந்நிலையில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தேவர் மற்றும் வன்னியர் சமூகத்தை ஒப்பிட்டு 10.5% உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக லோட்டஸ் செய்தி எனும் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது எடிட் செய்து பரப்பப்பட்ட போலிச் செய்தியே.
கே.பி. முனுசாமி இரு சமூகத்தை ஒப்பிட்டு அப்படி ஏதும் பேசவில்லை மற்றும் லோட்டஸ் செய்தி பக்கமும் அப்படி எந்தவொரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. வேண்டுமென்றே, யாரோ தவறாக எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள்.
அடுத்ததாக, முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ் 18 தமிழ் உடைய பழைய நியூஸ் கார்டில் எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
தேர்தல் தருணத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசியதாக போலியான கருத்துக்களை நியூஸ் கார்டுகளில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கி விட்டனர். சாதி மோதலை தூண்டும் விதத்திலும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆகையால், சமூக வலைதளங்களில் பகிரும் செய்தியின் உண்மை அறிந்து பகிரவும்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.