திருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்துக்கள் ஓட்டு தேவையில்லை பிரச்சாரத்தில் திருமாவளவன் பரபரப்பு பேச்சு
மதிப்பீடு
விளக்கம்
தமிழக தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தாலும் வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்.பி திருமாவளவன் தனது தேர்தல் பிரச்சாரத்தில், ” 6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்துக்கள் ஓட்டு தேவையில்லை ” என இழிவாக பேசியது போன்று ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
திருமாவளவன் அவ்வாறு பேசியதாக தந்தி டிவி சேனலில் எந்தவொரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மாறாக, எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் நியூஸ் கார்டை போலியானது என வெளியிட்டு உள்ளனர்.
மேலும் படிக்க : தமிழக தேர்தல்: அரசியலுக்காக உருவாக்கப்படும் போலி செய்திகளும், வதந்திகளும் !
தமிழக தேர்தலுக்காக எண்ணற்ற போலி செய்திகள், செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளில் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கள் பரப்பப்படுவது குறித்து நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.