This article is from Oct 23, 2020

திருமாவளவன் முகத்தை ஃபோட்டோஷாப் செய்து வதந்தி!

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளம்பெண் அருகே உள்ளாடையுடன் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மேலும், திருமாவளவனை பாலியல் குற்றவாளி எனக் கூறும் மீம் பதிவும் இணைக்கப்பட்டு ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.

Twitter link | Archive link 

இளம்பெண் அருகே உள்ளாடையுடன் நிற்கும் ஆண் உடலுடன் திருமாவளவனின் இளமைகால புகைப்படத்தை இணைத்து ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள் என நன்றாக கவனித்தால் தெளிவாய் தெரிகிறது. எனினும், இந்த புகைப்படம் கடந்த ஆண்டில் இருந்தே அரசியல் காரணங்களால் சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

 

அப்புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜூன் 29-ம் தேதி உண்மையான புகைப்படத்துடன் பதிவான ட்வீடும், அது தொடர்பான செய்தியும் கிடைத்தது.

“கோவையைச் சேர்ந்த பெண் தேசிய கட்சி பிரமுகர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கியதாகவும், கர்ப்பத்தை களைத்த பிறகு தன்னை ஏமாற்றியதாக திருமுருகன்பூண்டி போலீசில் புகார் மனு அளித்து இருந்தார். புகார் அளிக்கப்பட்ட தேசிய கட்சி பிரமுகர் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி அந்த பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும்போது வீடியோ எடுத்து பணம் பறிப்பதாக புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருவதாக ” 2019 ஜூன் 28-ம் தேதி தினதந்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

தினகரன் செய்தியில் மட்டும், அந்த தேசிய கட்சியின் பிரமுகர் பாஜகவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தனர். பொள்ளாச்சி சம்பவம் போல் தொழிலதிபர்களை பெண்ணுடன் ஆபாசமாக இருக்க வைத்து புகைப்படம் எடுத்து மிரட்டியதாக பரவிய சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படத்தில் இருக்கும் நபரின் புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்து திருமாவளவன் என வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க :  திருமாவளவன் மீதான பாலியல் குற்றச்சாட்டும், போலி புகைப்படமும் !

திருமாவளவன் இளமைகாலத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், திருமாவளவன் ஒரு பாலியல் குற்றவாளி எனக் கூறியும் பரவிய மீமில் இடம்பெற்ற புகைப்படமும், செய்தியும் தவறானது என நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader