திருமோகூர் கோவிலில் செல்போன் டவர் மூலம் அறநிலையத்துறை சம்பாதிப்பதாக பரவும் இடிதாங்கியின் படம் !

பரவிய செய்தி

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர். 1400 வருட பழமையான மண்டபம் மைல் வைக்க ASI அனுமதி பெற்றனரா? நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம்.

மதிப்பீடு

விளக்கம்

1400 ஆண்டுகள் பழமையான திருமோகூர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை செல்போன் டவர் அமைத்து சம்பாரித்து வருவதாகவும், பழமையான கோவில் மண்டபத்தில் டவர் வைக்க இந்திய அகழ்வாராய்ச்சி மையத்திடம் அனுமதி வாங்கியதா என சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் இப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Archive link  

உண்மை என்ன ? 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை செல்போன் டவர் அமைத்து உள்ளதாக பரவும் புகைப்படம் குறித்து தேடுகையில், கூகுள் மேப் தளத்தில் கோவிலில் 2019 மற்றும் 2021-ல் இரும்பிலான கோபுரம் இருக்கும் புகைப்படங்களை காண முடிந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கூட கோவிலில் இரும்பிலான கோபுரம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதில், செல்போன் டவருக்கான கருவிகள் உள்ளிட்டவை ஏதும் இல்லை.ஒலிபெருக்கி மட்டுமே கட்டப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link  

வைரல் செய்யப்படும் பதிவுகள் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ” “திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர். நம்மாழ்வார் பாடிய கோவிலில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம் ” என்று வாட்ஸ் அப் செய்திகள் பகிரப்படுகிறது. இது உண்மையல்ல. கோபுர பாதுகாப்புக்காக 2014 ஆம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 
2014 ஆம் ஆண்டு திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் 3.99 லட்சம் செலவிலும், அதன் உபகோவிலான நரசிங்கப்பெருமாள் திருக்கோவிலில் 2.46 லட்சம் செலவிலும் இடிதாங்கி அமைக்க ஒப்பந்தபுள்ளி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
.
முடிவு : 
.
நம் தேடலில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல்போன் டவர் அமைத்து இந்து சமய அறநிலையத்துறை சம்பாதிப்பதாக பரவும் தகவல் வதந்தியே. வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருப்பது செல்போன் டவர் அல்ல , இடிதாங்கி என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button