தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஸ்னைப்பர் பயன்படுத்தியதாக தவறான தகவலை வெளியிட்ட சன் நியூஸ் !

பரவிய செய்தி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் திடுக் தகவல். ஸ்னைப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2018 ஆம் ஆண்டு மே 22 தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். அந்த ஆலையை மூடக் கோரி மக்கள் ஏறத்தாழ நூறாவது நாளில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில் காவலர்கள் போராடிய மக்கள் மீது கடுமையான துப்பாக்கியைச் சூட்டை நிகழ்த்தினார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டியில் 13 பேர் உயிர் இழந்தனர், சுமார் 100 படுகாயம் அடைந்தனர்.

இதனைக் குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 14 தேதி இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்து இருந்தார். தற்போது ஆகஸ்ட் 18-ம் தேதி முழுமையான அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இதைப்பற்றி சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிட்ட செய்தியில் தவறான தகவல் ஒன்று இடம்பெற்று உள்ளது. அது என்னவென்றால், ஸ்னைப்பர் துப்பாக்கியைத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தியதாக உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ?

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அளித்த அறிக்கையில், ” நீண்ட தூரம் வரை சுடக்கூடிய தானாக லோடு செய்யும் எஸ்எல்ஆர் துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டு உள்ளது ” என தி ஹிந்து பிரன்ட்லைன் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஸ்னைப்பர் துப்பாக்கி அல்ல.


எஸ்எல்ஆர் துப்பாக்கி வேறு, ஸ்னைப்பர் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்னைப்பர் துப்பாக்கி வெகு தூரத்தில் உள்ளவர்களைக் குறிவைத்துச் சுடுவதற்குப் பயன்படுத்துவார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்திய துப்பாக்கி எஸ்எல்ஆர் வகையைச் சார்ந்தவையாகும்.

முடிவு:

நமது தேடலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி ஸ்னைப்பர் வகை இல்லை. காவலர்கள் எஸ்எல்ஆர் வகை துப்பாக்கியைத் தான் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அளித்த அறிக்கையில் ஸ்னைப்பர் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தவறான தகவலை சன் செய்தியில் வெளியிடப்பட்டு உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader