This article is from Sep 08, 2020

3 ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல| பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள். 2 அண்ணன்கள் மற்றும் 1 தங்கை என அனைவரும் ஐபிஎஸ் அதிகாரிகள்.

மதிப்பீடு

விளக்கம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாகி உள்ளதாக இரு ஆண்கள் மற்றும் ஓர் பெண் காவலர் உடையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சார்ந்த முகநூல் பக்கங்களில் கூட இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Facebook link | archive link 

உண்மை என்ன ? 

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹரியானாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி பூஜா வாசிஸ்த் உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” வாழ்க்கையை எளிதாக்கும் நபர்கள் ” எனக் கூறி வைரலாகும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Instagram link | archive link

அந்த புகைப்படத்தில், இடது பக்கத்தில் இருப்பவர் ஸ்ருதகீர்த்தி சோமவான்சி மற்றும் வலது பக்கத்தில் இருப்பவர் துஷார் குப்தா. ஐபிஎஸ் அதிகாரி துஷார் குப்தா உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Instagram link | archive link

பூஜா வாசிஸ்த், ஸ்ருதகீர்த்தி சோமவான்சி, துஷார் குப்தா ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்களைப் பற்றி தவறான தகவல் பரவுவதாகப் பதிவிட்டு உள்ளார்கள்.

Twitter link | archive link 

2018-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரி மூன்று பேரும் பயிற்சியில் ஒன்றாக இருந்தவர்கள். 2018 டிசம்பர் 19-ம் தேதி வெளியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்த அறிவிப்பில் மூன்று பேரின் விவரங்களும் இடம்பெற்று உள்ளதை காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader