திபெத்தில் மேகம் தரை இறங்கியதாக பரவும் பழைய மணல் புயல் வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திபெத்திய பகுதியில் மேகம் தரையில் இறங்கிய அற்புதக் காட்சி என கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. இவ்வீடியோ குறித்து ஃபேஸ்புக்கில் ஆராய்கையில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இப்பதிவு தமிழில் பரப்பப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிந்தது.
இந்திய மொழிகள் பலவற்றிலும் கூட இவ்வீடியோ வைரலாகி உள்ளது. ஆனால், 2016-ம் ஆண்டிலேயே Lindsay Defrancisco எனும் யூடியூப் சேனலில் மேகம் தரையிறங்கிய அற்புத காட்சி என இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்ட கனரக வாகனத்தின் அருகே நின்று எடுக்கப்பட்ட வீடியோவில் ஆகாயத்தில் உள்ள மேகத்திற்கும், நிலத்தில் இருக்கும் மேகம் எனக் கூறப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம். அது மேகம் அல்ல, மணல் புயலாகும்.
இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் கூட மிகப்பெரிய மணல் புயல் கடந்து செல்லும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மிகப்பெரிய மணல் புயல் உருவாகியது. வைரலாகும் வீடியோவை போன்று இணையத்தில் மணல் புயல் வீடியோக்கள் பல பதிவாகி உள்ளன.
வைரலாகும் வீடியோ திபெத்திய பகுதியில் நிகழ்ந்ததாக பரவுவதற்கு முன்னதாக சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிகழ்ந்ததாகவும் வைரலாகியது. 2016-ல் சீனாவில் உருவான மணல் புயல் குறித்து சீனா செய்தியில் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும், வைரலாகும் வீடியோவில் இடம்பெறும் மணல் புயல் எங்கு நிகழ்ந்தது என உறுதி செய்ய முடியவில்லை.
Wall of sand as high as 100 meters roars through Inner Mongolia Monday for over 40 min; visibility less than 10 m pic.twitter.com/zUNxWxIBIG
— China Xinhua News (@XHNews) May 24, 2016
முடிவு :
நம் தேடலில், திபெத் பகுதியில் மேகம் தரையிறங்கிய அற்புத காட்சி என பரப்பப்படும் வீடியோ மணல் புயல் சாலையை மறைத்து இருக்கும் காட்சி என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.