டிக் டாக் நிறுவனர் எனப் பரவும் தவறான நபரின் வீடியோ !

பரவிய செய்தி

மண்ணுலகில் முடியாது என்று ஒரு செயலும் கிடையாது. இவர் தான்  டிக் டாக் செயலியின் நிறுவனர் மற்றும்  தலைவர் 

X link

மதிப்பீடு

விளக்கம்

டிக் டாக் செயலியின் நிறுவனர் மற்றும் தலைவர் என இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பிறரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு பரப்பப்படுகிறது. அதில் அந்நபர் நிகழ்ச்சி ஒன்றில் பலரது முன்னிலையில் உரையாற்றுவது போன்றுள்ளது.

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடியதில் South China Morning Post’ எனும் தளத்தில் வெளியாகி இருந்த கட்டுரை ஒன்று கிடைக்கப்பெற்றது. 

‘Legless warrior’ எனத் தலைப்பிட்டு 2023, ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அக்கட்டுரையில் பரவக் கூடிய வீடியோவில் இருக்கும் மாற்றுத் திறனாளியின் புகைப்படம் உள்ளது.  

‘சென் சோ’ (Chen Zhou) என்னும் அவர் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். அவருக்கு 13 வயது இருக்கும் போது ஏற்பட்ட இரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்துள்ளார். பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான இசைக் குழுவில் சேர்ந்து பாடகராக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் பல மலைகளை ஏறி சாதனைகளும் படைத்துள்ளார்.

இவர் பற்றி ‘China Daily’, ‘Ability Magazine’ எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி TEDx Talks’ நிகழ்ச்சியிலும் பேசியுள்ளார்.

மேலும் டிக் டாக் செயலி நிறுவனர் ’ஜாங் யிமிங்’ (Zhang Yiming) என்பதும் தேடுதலில் தெரிய வந்தது. ஜாங் யிமிங் மற்றும் பேச்சாளர் சென் சோ ஆகியோரது புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோவில் இருப்பது டிக் டாக் நிறுவனர் இல்லை என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : சீனாவில் புழு மழைப் பெய்ததாகப் பரவிய வதந்தி.. உண்மை என்ன ?

முடிவு : 

நம் தேடலில், டிக் டாக் நிறுவனர் எனப் பரவும் வீடியோவில் இருப்பது பாடகரும் பேச்சாளருமான சென் சோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader