This article is from Sep 30, 2018

அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியில் இயந்திர கொசு..! ஆபத்தானவையா ?

பரவிய செய்தி

இது அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள மிகச்சிறிய இயந்திர கொசு(robotic Mosquito). இதில் நுண்ணிய ஊசி உள்ளது. இதன் மூலம் யார் உடலில் வேண்டுமானாலும் எந்த ரசாயனத்தையும் அவர்களுக்கு தெரியாமலேயே செலுத்தலாம். கொலை செய்ய பெரிய ஆயுதங்கள் தேவையில்லை என்று நிருபித்து விட்டனர்.

மதிப்பீடு

சுருக்கம்

இயந்திர கொசு என்று படத்தில் காண்பிக்கும் தோற்றத்தில் Micro Aerial vehicles ஏதும் உருவாக்கப்படவில்லை. படத்தில் காட்டப்பட்டவை MAV மாதிரி வடிவம் பற்றி விவரிக்கும் கருத்து சார்ந்த படம் மட்டுமே..!

விளக்கம்

Micro Aerial vehicle– மனிதர்கள் மற்றும் பிற உபகரணங்கள் செல்ல பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு சிறு வடிவிலான பொருள் ஒன்றை அனுப்பி அங்குள்ள நிலை பற்றி ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ள அறிவியல் மற்றும் ராணுவத் துறைகளில் உருவாக்கப்படுபவை.

ராணுவத் துறைகளில் பயன்படுத்தப்படும் MAV-களில் மறைமுகமாக கேமரா, மைக்ரோபோன்ஸ் மற்றும் சில விதமான சென்சார்கள் பொருத்தப்படுகிறது. சில Micro Aerial vehicle உருவாக்கத்தில் சிறிய வடிவில், பறவைகள் மற்றும் பறக்கும் பூச்சிகள் தோற்றத்தில் உருவாக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் ராணுவத் துறையில் மிகப்பெரிய அளவில் MAV பங்கு இருக்கும் என துறைச் சார்ந்தவர்கள் நினைக்கின்றனர்.

2007-ல் Robotics Conference-ல் பூச்சி வடிவிலான 3 செ.மீ அளவில் Micro Aerial vehicle ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் படத்தில் உள்ளது போன்ற பெரிய வண்டு தோற்றத்தில் Micro Aerial vehicle-ஐ வெளியிட்டனர். 2012-ல் johns Hopkins university-ஐ சேர்ந்த பொறியாளர் ஒருவர் பறக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான MAV பற்றி அறிந்து கொண்டு பறக்கும் வான்வழி சிறிய இயந்திரத்தை மாற்றி அமைக்க உதவ முயன்றனர்.

சமூக வலைத்தளங்களில் சிறிய கொசு தோற்றத்தில் இயந்திரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் உருவாக்கி ஆயுதமாக பயன்படுத்தி வருகிறதாவும், அதில் இருக்கும் ஊசி மூலம் எவ்வித ரசாயனத்தையும் செலுத்த இயலும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று இம்மாதிரியான சிறிய ரக பறக்கும் இயந்திரங்கள் மூலம் கண்ணுக்கு புலப்படாமல் ஒருவரின் DNA மாதிரிகளை எடுக்கவோ அல்லது Micro RFID tracking devices-ஐ மக்களின் உடலில் பொருத்தவும் பயன்படுத்தலாம் என்றும் சிலக் கருத்துக்கள் பரவி வருகிறது.

” இணையத்தில் பரவும் படத்தில் சிறிய கொசு தோற்றத்தில் இருக்கும் பறக்கும் இயந்திரம் MAV மாதிரி வடிவம் பற்றி விவரிக்கும் கருத்து சார்ந்த படம் மட்டுமே. படத்தில் இருப்பவை ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் MAV-வின் உண்மையான வேலை செய்யும் சாதன வடிவம் அல்ல. இவை படங்கள் மட்டுமே ”

மேலும், அமெரிக்காவின் ராணுவத் துறையில் மட்டுமே மறைமுகமாக Micro Aerial vehicle உருவாக்கப்படுகிறது என்பது சித்தரிக்கப்பட்டவை. பல ஆண்டுகளாக MAV பற்றிய தகவல்கள் மற்றும் ஆராய்ச்சிகள் பலரால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக உள்நாட்டு பாதுகாப்பு கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தியும் வருகின்றனர்.

எனினும், எதிர்காலத்தில் MAV மூலம் DNA மாதிரிகளை எடுப்பது அல்லது Micro RFID tracking devices-ஐ மக்களின் உடலில் பொருத்துவது போன்றவை சாத்தியப்படலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். ஆனால், கொசு உருவத்தில் பறக்கும் சிறிய இயந்திரம் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது சரியான தகவல் அல்ல..!!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader