This article is from Apr 19, 2020

தமிழக பாஜக மது, போதைப் பொருட்களை வழங்குவதாக எடிட் செய்த புகைப்படம் !

பரவிய செய்தி

இதெல்லாம் ஒரு கட்சியா ?

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட பைகளில் ” மது மற்றும் போதை பொருட்கள்.. பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு.. மகிழ்ந்திரு ” என்ற வாசகம் இடம்பெற்று இருப்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகத் தலைவர் எல்.முருகன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற பையில் யாரோ வேண்டுமென்றே ” மது மற்றும் போதை பொருட்கள் ” என எடிட் செய்து இருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

இது குறித்து தேடிய பொழுது, ஏப்ரல் 14-ம் தேதி பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் ட்விட்டர் பக்கத்தில், ” இன்று Dr.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது ” என மோடிகிட் வழங்குவதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

Twitter link | archive link

மற்றொரு ட்வீட் பதிவில், ” எனது இல்லத்திற்கு அருகாமையில் இருந்த பல்வேறு விதமான தொழிலாளர்களுக்கு அடுத்த 20 நாட்களுக்கு அவர்கள் வீட்டிலேயே சமைத்துக் கொள்வதற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய “மோடி கிட்” வழங்கிய போது ” என சில படங்கள் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜக சார்பில் வழங்கப்பட்ட மோடி கிட் பைகளில் ” கொரோனா நிவாரண பொருட்கள் ” என இடம்பெற்று இருக்கும் இடத்தில் ” மது மற்றும் போதை பொருட்கள் ” என எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.

நம்முடைய தேடலில், தமிழக பாஜக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய மோடி கிட் பைகளில் மது மற்றும் போதை பொருட்கள் என எடிட் செய்து அரசியல் சார்ந்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader