பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை போட்டோஷாப் செய்து நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி
உங்க Photoshop எல்லாம் எங்கட்ட ஆகாது. Original ல பாருங்கடா.
மதிப்பீடு
விளக்கம்
சாலையோரத்தில் 20 பேர் பாஜக கொடியுடன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து கூட்டம் அதிகம் இருப்பது போல் காண்பித்து இருக்கும் புகைப்படத்தை உண்மையானது என ஒப்பீடு செய்து பாஜகவினர் பகிர்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் திமுகவினர் கிண்டல் செய்து பரப்பி வருகின்றனர்.
டேய் ஊபீஸ் உங்க Photoshop எல்லாம் எங்கட்ட ஆகாது.
Original ல பாருங்கடா.
மலடா 🔥🔥 pic.twitter.com/6u7g7QMLim
— ஜெகதீஷ்.கோ (@Jaisajoints) July 24, 2023
பாஜகவினர் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை பரப்பி வருவதாக ஜெகதீஷ் என்பவரின் பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இவர் திமுக ஆதரவாளர் என தனது பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பதிவை திமுகவின் பத்ம பிரியா பாஜக பரிதாபங்கள் எனக் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பதிவை திமுக ஆதரவாளரே பகிர்ந்து இருக்கிறார். ஆனால், அவருக்கும் முன்பாக கு.அண்ணாமலை ஆர்மி எனும் ட்ரோல் ஐடி பக்கம் முதன் முதலில் இதைப் பதிவிட்டு இருக்கிறது.
டேய் ஊபீஸ் உங்க Photoshop எல்லாம் எங்கட்ட ஆகாது.
Original ல பாருங்கடா.
மலடா 🔥🔥 pic.twitter.com/Zu2EqnJFnR
— கு.அண்ணாமலை PM ஆர்மி 🇮🇳🇮🇳🚩🚩 (@KarthikGnath420) July 24, 2023
இந்த ட்விட்டர் பக்கம் பாஜகவினருக்கு எதிராக பல்வேறு ட்ரோல் பதிவுகளை உண்மைப் போல் பரப்பி வருகிறது என்பதை முன்பே சில கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : உ.பி மகளிர் பேருந்து எனப் பதிவிட்ட மேற்கு வங்க பேருந்து படம்.. ட்ரோல் செய்யப்படும் ட்ரோல் பதிவு !
மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திறனற்ற திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலிருந்து..
தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் &… pic.twitter.com/StUYGZuqwt
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 23, 2023
கடந்த ஜூலை 23ம் தேதி திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வார்டு மற்றும் ஊராட்சி வாரியாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் படத்தை எடிட் பெய்து நையாண்டியாக பரப்பப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் படத்தை போட்டோஷாப் செய்து உண்மையான கூட்டம் எனப் பரப்பி வருவதாக பதிவு தவறானது. அது பாஜகவை ட்ரோல் செய்யும் பக்கத்தில் வெளியிடப்பட்ட நையாண்டிப் பதிவு என்பதை அறிய முடிகிறது.