கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் வெளிநடப்பு என பரப்பப்படும் எடிட் செய்தி !

பரவிய செய்தி
மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்நிலையில், மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் இடம்பெற்ற, ” மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் ” எனும் பகுதியை பார்க்கையில் எடிட் செய்யப்பட்டதாக தெரிந்தது.
புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், வைரல் செய்யப்படுவது போன்ற செய்தி நியூஸ் கார்டில் இடம்பெறவில்லை. அதில், ” பேச வாய்ப்பு தரவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் ” என்றே வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தின் போது மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, அது போலியான செய்தி என அறிய முடிகிறது.