பேருந்து தரத்தை உயர்த்த சொன்னவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

பரவிய செய்தி

தமிழக பேருந்துகளின் தரத்தை உயர்த்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவருக்கு 10,000 அபராதம்.

மதிப்பீடு

சுருக்கம்

சட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி தமிழக பேருந்துகளின் தரம் உள்ளதா என சோதனை செய்யவும் மற்றும் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களின் கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என வழக்கு தொடர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பருக்கு உயர் நீதிமன்றம் ரூ.10000 அபராதம் விதித்தது.

விளக்கம்

தமிழகத்தின் போக்குவரத்துத் துறையால் இயக்கப்படும் பேருந்துகளின் அவலநிலை பற்றிய புகைப்படங்களின் தொகுப்பை சமூக வலைத்தளங்களில் அதிகம் காணலாம்.

Advertisement

கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் பயணிக்கும் பேருந்துகளின் தரம் ஆங்காங்கே மிகவும் மோசமாக இருப்பதை பார்க்கலாம். ஜன்னல் இன்றி, மழைப் பெய்தால் மேற்கூரையில் இருந்து தண்ணீர் உள்ளே வருவது, ஓட்டுனர் இயங்கும் பகுதி மோசமாக, சில பேருந்துகளில் படிக்கட்டுகள் இன்றி இருப்பதையும் காண முடிந்தது.

தமிழகத்தில் இயங்கும் பேருந்துகள் சட்ட விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி உள்ளதா என சோதனை செய்யவும், பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களின் கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தொடுத்தார்.

2017-ல் நவம்பர் 27-ம் தேதி தொடர்ந்த வழக்கில், தமிழக பேருந்துகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், சரியாக பராமரிப்பு செய்யாத பேருந்துகள் அதிகம் விபத்து நேரிடுவதாக தெரிவித்தார். இதனால் மக்களுக்கு பாதுகாப்பான பயணம் சிறிதுமில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும், வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் கூட பராமரிப்பு இன்றி, தரம் இன்றியும் இருக்கும் புகைப்படங்களை சமர்பித்தார் சண்முகம். மாநில அரசின் தரம் குறைந்த பேருந்துகளால் தனியார் பேருந்துகள் அதிக லாபம் பார்க்கிறார்கள் என குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 28, 2018 வழக்கின் விசாரணையில் தமிழக பேருந்துகளின் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் பற்றிய சோதனைக் குறித்த தமிழக அரசிற்கு எதிரான ஜவஹர்லால் சண்முகம் உடைய வழக்கை தள்ளுபடி செய்ததோடு, விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என நீதிபதிகள் மணிகுமார் சுப்ரமணியம் பிரசாத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், வழக்கைத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்ததோடு, அத்தொகையை மாநில இளைஞர் நீதி நிதிக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.

ஜவஹர்லால் சண்முகம் இதற்கு முன்பாக மருத்துவமனைகளில் சாய்வுப்பாதைகள் அமைக்க வேண்டும் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button