இந்தியா மறுத்த திறமைக்கான அங்கீகாரம் ஜப்பான் நாட்டில் கிடைத்துள்ளது !

பரவிய செய்தி
ஹைட்ரஜனை எரிபொருளாக்கி ஆக்சிஜனை வெளியிடும் உலகின் முதல் என்சினை கண்டுபிடித்தார் தமிழகத்தின் கிருஷ்ணசாமி .
மதிப்பீடு
சுருக்கம்
தமிழகத்தைச் சேர்ந்த குமாரசாமி கண்டுபித்த, டிஸ்டைல்டு தண்ணீரில் (Distilled water) ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக் கொள்ளும் என்சினிற்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ஆங்கில செய்திக்கு பேட்டி அளித்து உள்ளார்.
குமாரசாமியின் பெயர் தவறுதலாக கிருஷ்ணசாமி என மீம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளக்கம்
தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரான சௌந்தரராஜன் குமாரசாமி என்பவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தராத வகையில் டிஸ்டைல்டு தண்ணீரில் (Distilled water) இயங்கக்கூடிய என்சின் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் என்சினானது உருவாக்கப்பட்டு உள்ளது.
Tamil Nadu: S Kumarasamy, a Coimbatore based mechanical engineer claims to have invented an engine that can run on distilled water. He says,”It took me 10 years to develop this engine, it’s the first of its kind in world. It uses hydrogen as fuel source & releases oxygen.” (10.5) pic.twitter.com/BGqJi1po0C
— ANI (@ANI) May 10, 2019
ANI செய்தியில் குமாரசாமி அளித்த பேட்டியில், ” இதனை கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகின. ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் இந்த வகையான அம்சத்தை கொண்ட என்ஜின் கண்டுபிடிப்பில் உலகிலேயே இதுவே முதல் முறை ” என தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த கண்டுபிடிப்பு இன்னும் சில நாட்களில் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவிலும் அறிமுகமாகும் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
Sounthirajan Kumarasamy: My dream is to introduce this engine in India, I knocked all the doors of the administrators but couldn’t get a positive response. So, I approached the Japan govt & got the opportunity, this engine will be introduced in Japan in the coming days. (10.5.19) pic.twitter.com/RXFesapvr2
— ANI (@ANI) May 10, 2019
இந்த கண்டுபிடிப்பை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்த பல நிர்வாகிகளின் கதவுகளை தட்டி உள்ளார். ஆனால் ,ஒருவரிடம் இருந்தும் சரியான பதில் இல்லை. வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தன் கண்டுபிடிப்பை ஜப்பான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். குமாரசாமியின் கண்டுபிடிப்பிற்கு ஜப்பான் அரசு வாய்ப்பு அளித்தது. இந்த என்சின் சில நாட்களில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
நம் நாட்டில் கண்டுபிடிப்புகளுக்கும், திறமையாளர்களுக்கும் பஞ்சமில்லை. வாய்ப்புகள் கிடைத்தால் தான் யாராக இருந்தாலும் திறமையை நிரூபிக்க முடியும் . ஜப்பான் அரசின் உதவியால் குமாரசாமியின் திறமை வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
குமாரசாமியின் கண்டுபிடிப்பிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் பெருகிய வண்ணம் உள்ளன.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.