தமிழகத்தில் வெள்ள நீரில் வீடுகளுக்குள் மீன்கள் புகுந்ததாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

₹2,500 கோடியில் வெள்ள நீரில். இல்லங்களில் கட்லாமீன் வளர்க்கும் திட்டம் துவங்கபட்டது. கடல் அலை போல வருடி செல்லும் அழகு. திமுக கழக அரசின் சாதனை

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, ஏரியில் இருந்து வரும் வெள்ள நீரில் மக்கள் மீனை பிடிப்பதாகவும், குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் நுழைவதாகவும் வீடியோ, செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், வெள்ள நீரில் வீடுகளுக்குள் கட்லாமீன்கள் கூட்டமாய் நுழைந்து இருப்பதாக திமுக அரசை விமர்சித்து 29 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Archive link  

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், 2020 நவம்பரில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளுக்குள் கேட்பிஷ் நுழைந்ததாக இவ்வீடியோ வைரலாகி வருவதாக therakyatpost இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link  

இதே வீடியோ சில நாட்களுக்கு முன்பாக திருப்பதியில் எடுக்கப்பட்டதாகவும் தவறாகப் பரப்பப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளுக்குள் கட்லாமீன்கள் நுழைந்ததாக பரப்பப்படும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்தது அல்ல. இந்த வீடியோ 2020-ல் மலேசியா வெள்ளத்தின் போது அங்கு பரவியதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader