ரூ.198 கோடியில் 1 லட்சம் மரங்களை நட தமிழக அரசு திட்டமா ?| செய்தி பிழை !

பரவிய செய்தி

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் : ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு..அப்போ ஒரு மரக்கன்று 19,800 ரூபாயா.. என்னடா இது ஒரே பித்தலாட்டமா இருக்கு !!

மதிப்பீடு

விளக்கம்

மிழக அரசின் சார்பில் ரூ.198 கோடி மதிப்பில் 1 லட்சம் மரங்களை நடும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தந்தி டிவி செய்தியில் வெளியானது முகநூலில் வைரலாகியது. ஒரு லட்சம் மரங்கள் நட 198 கோடி ரூபாய் என்றால் ஒரு மரத்திற்கு 19,800 ரூபாய் என கணக்கிட்டு மீம்ஸ்களாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழக ஆட்சியாளர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கும் இவ்வேளையில் மரம் நடும் திட்டத்தின் அரசாணை கூடுதலாக விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. எனினும், 198 கோடிக்கு ஒரு லட்சம் மரங்கள் நடுவதாக இருந்தால் பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கக்கூடும். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

ஆகையால், தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் மரங்களை நடுவதற்கு 198 கோடி செலவிட உள்ளதாக கூறும் தந்தி டிவி செய்தி தலைப்பு குறித்து ஆராய்ந்து பார்த்தோம். குழப்பத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் அரசாணை குறித்த தந்தி டிவியின் செய்தி செப்டம்பர் 9-ம் தேதி அதன் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை கண்டோம்.

அதில், ” மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான முதல் மரக்கன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் ” என வெளியிட்டு உள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனை பராமரித்திட வேண்டும். இதற்காக 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

71 லட்ச மரங்களை நட்டு பராமரிக்க 198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளனர். அதன்படி பார்த்தால் ஒரு மரத்திற்கு 280 ரூபாய் வரை கணக்கிட்டு உள்ளனர். 71 லட்சம் மரங்கள் என்பதற்கு பதிலாக 1 லட்சம் என தலைப்பிட்டு உள்ளனர். ஆனால், உள்ளே செய்தியில் 71 லட்சம் என்றே குறிப்பிட்டு உள்ளனர்.

இது தலைப்பில் இருக்கும் பிழையே. ஆனால், செய்தி வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் செய்தியில் உள்ள பிழைகள் திருத்தப்படவில்லை. பிற செய்திகளில் 71 லட்ச மரங்களை நட ரூ.198 கோடி ஒதுக்கி உள்ளதாகவே வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம்முடைய தேடலில், தந்தி டிவியின் செய்தி தலைப்பில் ரூ.198 கோடி மதிப்பில் 71 லட்சம் மரங்கள் நடப்படும் எனக் கூறுவதற்கு பதிலாக 1 லட்சம் என பிழை ஏற்பட்டதே குழப்பத்திற்கு காரணமாகி உள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button