மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாமா ?

பரவிய செய்தி

பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு… உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று மண்டலங்கள் வாரியாக எங்களை அறிவித்துள்ளது TNEB – TANGEDCO .

மதிப்பீடு

விளக்கம்

நாம் வசிக்கும் பகுதிகளில் மின்சார கம்பங்கள், கம்பிகள், மின் இனைப்பில்லை என்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க அப்பகுதியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசுவோம். இனி , மின்சாரம் சம்பந்தமான புகார்களை வாட்ஸ் அப் மூலமும் பதிவு செய்யலாம் என ஓர் ஃபார்வர்டு செய்தி பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறும் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது.

Advertisement

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) , வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்களை அறிவித்தது. ” பொதுமக்கள் தங்கள் குறைகளை அனுப்பும் போது அவர்களின் இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும், இது எங்கள் அதிகாரிகளுக்கு பிரச்சனையை தீர்க்க எளிதாக இருக்கும் ” என Tangedco-வின் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.பத்மநாபன் செய்திகளில் கூறியுள்ளார்.

சிதைவடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், திறந்து இருக்கும் ஜங்சன் பாக்ஸ்கள் , கீழே தொங்கும் மின்சார கம்பிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகைப்படங்கள் அல்லது விவரங்களை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப் எண்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445855768. 

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445851912. 

Advertisement

சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9445850829.

கோயம்புத்தூர் , திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் – 9442111912. 

திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு – 8903331912.

மதுரை , திண்டுக்கல் , தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களின் புகார்களுக்கு – 9443111912.

திருச்சி , தஞ்சாவூர் , பெரம்பலூர், அரியலூர் , புதுக்கோட்டை , திருவாரூர் , நாகப்பட்டினம் , கரூர் மாவட்டங்களின் புகார்களுக்கு – 9486111912.

தமிழக மின்சார வாரியத்தின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் புகார்களை அளிக்க வாட்ஸ் எண்களை அளித்து இருப்பது பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது மக்களுக்கு உடனடி தீர்வு அளிக்குமா என்பது குறித்து தெரியவில்லை. எனினும், பொது இடங்களில் நீங்கள் காணும் மின்சார பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பது மின்சார வாரியத்தின் பார்வைக்கு செல்லும்.

இதைத் தவிர, உங்கள் பகுதியில் ஏதேனும் மின்சார பிரச்சனைகள் இருந்து மின் வாரியத்திற்கு புகார் தெரிவிக்க விரும்பினால் ” 1912 ” என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம். இல்லையேல், உங்கள் பகுதியில் இருக்கும் மின்வாரியத்தின் அலுவலக எண்ணிற்கும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவையும் முடியாத பட்சத்தில், வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிப்பது பயனளிக்கலாம்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close