தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் சேர 2016-ல் சட்ட திருத்தமா ?

பரவிய செய்தி

தமிழக அரசுப் பணிகளில் தமிழ் தெரியாதவர்களும் சேர முடியும் என்று 2016 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட சட்டத்திருத்த பிரதி இணைத்துள்ளேன். பக்கம் 44 இவ்வாறு சொல்கிறது. ஆனால் இதே பிரச்சனையில் ஆதாரமே கிடைக்கவில்லை என்று ‘உண்மையறியும்’ இணையம் ஒன்று சொல்கிறது. எது சரி?

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர்களை அமர்த்துவதாக தொடர் குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு பணிகளில் தமிழ் தெரியாதவர்களும் பணியில் சேர முடியும் வகையில் 2016-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் ஒரு உண்மையறியும் இணையதளம் அப்படியொரு ஆணையே வரவில்லை எனக் கூறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன் 2016-ம் ஆண்டு வெளியான அரசு வெளியீட்டின் பக்கத்தை வெளியிட்டு இருந்தார். இதன் உண்மைத்தன்மை குறித்தும் கேட்டு இருந்தார்

Advertisement

அந்த உண்மையறியும் தளத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களை பணியில் அமர்த்தும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவில்லை, 2016-ல் அப்படி எந்தவொரு அரசு ஆணையும் வெளியாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசிதழ் சிறப்பு வெளியீடு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் 44-ம் பக்கத்தில்,” வரம்புரையாக, பணியில் உள்ள நபர்கள் தமிழில் போதிய அறிவின்றி அவருடைய தமிழ் அறிவானது தமிழில் இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள தேர்வுகளை எழுதுவது குறித்த தரநிலையில் இல்லாது இருக்கையில் அந்த தேர்வுகளை தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது அல்லது இந்தி போன்ற ஏதாவது ஒரு மொழியில் எழுதலாம் மற்றும் பணி மாறுதலினால் அல்லது பதவி உயர்வினால் அவர்களின் பணி அமர்த்தத்திற்கு தமிழில் மொழி தேர்ச்சி பெற அவசியம் இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சிந்தன் ட்வீட் செய்துள்ளார்.

அதேநேரத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வு தகுதியில் 10-ம் வகுப்பில் தமிழ் மொழிப் பாடத்தில் தேர்ச்சி அல்லது பணி நியமனம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழித்திறன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற குறிப்பிட்ட விதிகளின்படி தமிழ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது என பக்கம் 52-ல் காணலாம்.

Advertisement

2017-ல் டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் அளித்த அறிக்கையில், ” குரூப் 4 தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களும் பங்கேற்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் மாற்றம் செய்து உள்ளதாக சமீபத்திய செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த தகவல் தவறானது. 1955-ம் ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டின் சிறப்பு விதிகளின்படி வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது இருந்து வருகிறது ” எனக் கூறியதாக கல்விமலரில் வெளியாகி இருக்கிறது.

2019-ல் வெளியான மற்றொரு செய்தியில், ” தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கும் முறை 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பொது பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில்தான் வெளிமாநிலத்தில் இருந்து தேர்வு எழுதுபவர்கள் சேர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்கள் போட்டி தேர்ச்சி பெற்றால் இரண்டு ஆண்டுகளுக்குள் மொழித்திறன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால்தான் பணி ஆணை வழங்கப்படும் எனவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெளிமாநில தேர்வுகளில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ” என இடம்பெற்று இருக்கிறது.

2019 ஜூன் 5-ம் தேதி பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக அரசியல் எதிர்ப்பு, ஆனால் வெளிநாட்டவர்கள் தகுதி உடையவர்கள் என வெளியான செய்தியில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட போட்டியாளர்களுக்கான அறிவுத்தலின்படி, விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், நேபாளம், பூட்டான் சேர்ந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட நாடுகளில் இருந்து 1962 ஜனவரிக்கு முன்னர் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிய அகதிகள், குடிபெயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் ” எனக் கூறியதாக வெளியாகிறது.

நம் தேடலில்,

தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கும் வகையில் 2016-ல் சட்டத்திருத்தம் செய்ததாகக் கூறும் தகவல் தவறானது. பொதுப் பிரிவில்(31%) பல ஆண்டுகளாகவே வெளிமாநிலத்தவர்கள் போட்டி தேர்வில் பங்கேற்கும் நடைமுறை இருந்து வருகிறது. 69% இடஒதுக்கீட்டில் போட்டியிடுபவர்கள் அல்ல.

சிந்தன் குறிப்பிட்ட உண்மையறிதல் இணையதளம், தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கும் வகையில் 2016-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை எனக் கூறியது உண்மை. அதேநேரத்தில், தேர்வு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் எந்தவொரு ஆணையும் வெளியாகவில்லை எனக் கூறியது தவறாகும்.

2016-ம் ஆண்டு அரசு ஆணையில், சிறப்பு விதிகளின்படி, பணி நிரந்தரம், மாறுதல்கள் மற்றும் பணி உயர்விற்கு பணி இருப்பவர்கள் பிற மொழிகளில் தேர்வு எழுதலாம் மற்றும் தமிழ் மொழியில் தேர்ச்சி அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி அல்லது பணி நியமனம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழித்திறன் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் பணி ஆணை ரத்து செய்யப்படும் என்கிற விதியும் இருக்கிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button