டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
ஜப்பானியின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பாரத நாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக 1.20 நிமிட வீடியோ முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவையில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வைரல் ஆகி வருகிறது.
உண்மை என்ன ?
டோக்கியோ ஒலிம்பிக்கின் துவங்க விழா நிகழ்ச்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செய்திகள் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றன. ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்ததாக தேடினால், வைரல் செய்யப்படும் வீடியோ மட்டும் கிடைக்கின்றன.
வைரல் செய்யப்படும் வீடியோவில் குறித்து தேடுகையில், 2021 பிப்ரவரியில் யூடியூப் சேனல் ஒன்றில் மங்கோலியாவில் சூரிய நமஸ்காரம் என இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில், 2015 மே 18-ம் தேதி மாங்கோ நியூஸ் எனும் யூடியூப் சேனலில் மங்கோலியாவில் நடைபெற்ற இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்றவர்கள் இருக்கிறார்கள்.
Had I not come here and met you all, perhaps this trip would be incomplete: PM @narendramodi https://t.co/zLA6X9APHD
— PMO India (@PMOIndia) May 17, 2015
2015 மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட போது நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சூரிய நமஸ்காரம், யோகா உள்ளிட்டவையை செய்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்வதாக பரவும் தகவல் தவறானது. வைரல் செய்யப்படும் வீடியோ 2015-ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா நாட்டிற்கு சென்ற போது நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.