ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருப்பதாக பரப்பப்படும் AI புகைப்படம் !

பரவிய செய்தி
டாம் குரூஸ் தனது டூப் நடிகர்களுடன்..
மதிப்பீடு
விளக்கம்
ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ் தனது திரைப்படங்களில் ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும். அவர் நடிப்பில் வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்தில் அவர் மேற்கொண்ட ஆபத்தான ஸ்டண்ட் காட்சி வைரலானது.
Tom Cruise’s stunt doubles at the wrap party of Mission Impossible 7 👀
Pic credit :- Facebook Harsh Warrdhan pic.twitter.com/GV6FwaOtO9
— Lakshmi R Iyer (@LakshmiRIyer) June 7, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 4ம் தேதி ஃபேஸ்புக் பயனர் Ong Hui Woo என்பவர் மிட்ஜர்னி எனும் ஃபேஸ்புக் குழுவில் டாம் க்ரூஸ் டூப் நடிகர்களின் கொண்டாட்டம் எனக் கூறி இப்புகைப்படங்களின் தொகுப்பை பதிவிட்டு இருக்கிறார்.
இப்பதிவில், இப்புகைப்படங்களை பயன்படுத்த விரும்புவோர் உண்மையான கிரியேட்டரான எனக்கு கிரெடிட் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய பக்கத்தில் நடிகர் டாம் க்ரூஸ் உருவத்தை வைத்து AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க : ஹாலிவுட் நடிகர் ராக் இந்து மதத்திற்கு மாறியதாக தவறாகப் பரப்பப்படும் AI படங்கள் !
மேலும் படிக்க : பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !
இதற்கு முன்பாக, சமூக வலைதளங்களில் தவறாக பரவிய AI புகைப்படங்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருப்பதாகப் பரப்பப்படும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலியான படங்கள் என்பதை அறிய முடிகிறது.