This article is from Aug 27, 2018

ஊழல் செய்த பிரதமர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரதமர் மோடி: பிபிசி வெளியிட்டதா ?

பரவிய செய்தி

உலகிலேயே அதிக ஊழல்கள் செய்த பிரதமர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தில் இருப்பதாக பாக்ஸ் நியூஸிலும் 7-வது இடத்தில் இருப்பதாக பிபிசி இணையதளப் பக்கத்திலும் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

அதிக ஊழல்கள் புரிந்த பிரதமர்கள் பபட்டியலில் இந்திய பிரதமர் மோடி 7-வது இடத்தையும் பிடித்துள்ளார் என்று செய்தி வெளியிட்ட BBC news hub மற்றும் FOX NEWS POINT இணையதளங்கள் பிபிசி பாக்ஸ் நியூஸின் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.

விளக்கம்

அரசியல்வாதிகள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெறும் வாய் பேச்சில் கூறப்பட்டாலும் பல ஊழல் வழக்குகள் தகுந்த ஆதாரமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமல் போய் விடுகிறது. இந்நிலையில் தான் ஒவ்வொரு நாட்டின் ஆட்சியில் முதன்மையானவர்களாக திகழும் பிரதம மந்திரிகள் நிகழ்த்திய ஊழல்கள் குறித்த பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 7-வது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். BBC news hub என்ற இணையத்தளத்தில் வெளியாகிய இந்த பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“ BBC news hub ” நடத்திய ஆய்வில் இந்திய பிரதமர் மோடி ஊழல்கள் பட்டியலில் 7 வது இடத்தில உள்ளார் என்று “ I SUPPORT RAHUL GANDHI “ என்று முகநூல் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. பிரதமர் மோடி தன்னுடைய வியாபாரம் நண்பரான சஹாரா நிறுவனம் மூலம் 2,50,000 USD  டாலர்களை செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பிபிசி தரப்பில் இதுபோன்ற எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதே உண்மை.BBC news hub என்பது பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல. ஊழல் தலைவர்கள் என்று கூறுவதற்காக சிலர் புதிதாக பிபிசி செய்தி நிறுவனம் பெயரில் தொடங்கிய இணையதளம் ஆகும். தவறான செய்தி என்பதை அறியாமல் உடனே உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளனர்.

இவை முதல் முறையாக ஒன்றும் நடைபெறவில்லை. இதேபோல் சென்ற 2017-ல் BBC news point என்ற பெயர் கொண்ட இணையதளத்தில் உலகளவில் ஊழல் புரிந்த அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 4-ம் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் இருந்த இடத்தில் போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டு வைரலாகியது என்பது மற்றொரு கதை.

FOX NEWS :

FOX news point என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் அதிகளவில் ஊழல் புரிந்த பிரதமர்கள் பெயர்கள் கொண்ட பட்டியல் வெளியிட்டுள்ளதாகவும், அதில் பிரதமர் மோடி 2-ம் இடத்தில் உள்ளார் என்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது. மேலும், ஊழல்கள் அதிகம் புரிந்த குடும்பங்கள் பட்டியலிலும் பிரதமர் மோடியின் குடும்பம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த FOX news  நிறுவனம் இதுபோன்ற எந்தவொரு ஆய்வையும் நடத்தி பட்டியலை வெளியிடவில்லை. FOX news பெயரில் போலியான இணையதளத்தை தொடங்கி இவ்வாறு செய்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. FOX news இணையதளத்தில் இந்த ஆய்வு தொடர்பாக எந்தவொரு செய்தியும் இல்லை மற்றும் FOX news point பெயரில் சென்ற ஆண்டு ஊழல் கட்சிகள் பட்டியல் வெளியாகியது.

” 2017-ல் FOX news point என்ற பெயரில் உலகில் டாப் 10  ஊழல் கட்சிகள் என்று போலியான செய்திகள் வெளியாகின. அதேபோன்றே தற்போதும் வெளியாகியுள்ளது என்பதை அறிய முடிகிறது. FOX news point மற்றும் BBC news point ஆகிய பெயரில் போலியான இணையதளத்தை தொடங்கி தங்களுக்கு பிடிக்காத கட்சியின் பெயரை வைத்து பட்டியலை வெளியிடுகின்றனர் “.

Please complete the required fields.




Back to top button
loader