லேன்டிங் கியர் செயலிழந்த விமானம் ட்ரக் ஆல் தரையிறங்கியதா ?

பரவிய செய்தி

லேன்டிங் கியர் செயல் இழந்த விமானத்தை ட்ரக் மூலம் பாதுகாப்பாக தரை இறக்கி உள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ட்ரக் வாகனம் பற்றி விளம்பரப்படுத்த நிஸ்ஸான் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ பதிவே இவை.

விளக்கம்

ஒர் விமானம் ஓடு தளத்தில் தரையிறங்கும் போது அதன் சக்கரங்களை சிறிய ரக ட்ரக் ஒன்று தாங்கி, தரையிறங்க உதவுவது போன்று படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. லேண்டிங் கியர் பழுதடைந்த காரணத்தினால் விமானத்தை தரையிறங்க சிறய ரக ட்ரக் உதவி செய்வது போன்று அக்காட்சி இடம்பெற்று உள்ளது.

விமானத்தின் முன் சக்கரம் ட்ரக் வாகனத்தில் திறமையாக நிலைநிறுத்தப்பட்டு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் முழுவதுமாக பாதுகாப்பாக தரையிறங்கி விடும்.

ஆனால், ஒரு விமானத்தை பற்றி முழுவதுமாக அறியாமல் இவ்வாறு ஒரு வதந்தியை பரப்ப கூடாது . அவ்வளவு பெரிய விமானத்தை சிறு ட்ரக் எவ்வாறு தாங்கும் ! விமானத்தின் வேகத்திற்கு ட்ரக் ஆல் ஈடுகொடுக்க முடியுமா ? என்ற அடிப்படை கேள்விகள் எழுகிறது.

gear failure

முடியாது என்பது தான் உண்மை, விமானத்தின் தரையிறங்கும் வேகம் 130 முதல் 150 knots அதாவது 150 முதல் 170 mph. ஆனால் ட்ரக்கின் அதிகபட்ச வேகம் 90 mph மட்டுமே ஆகும் . இவ்வாறு இருக்கு போது எப்படி விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கி இருக்க முடியும் .

எப்படியென்றால், இந்த காட்சிகள் ஓர் விளம்பரத்திற்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்டது ஆகும் . ஆம் நிஸ்ஸான்கம்பெனி தனது புதிய ரக Frontier ட்ரக் வாகனத்தின் விளம்பரத்திற்காக உருவாக்கிய வீடியோ பதிவு ஆகும் . 2011  ஆம் ஆண்டு நிஸ்ஸான் நிறுவனம் இந்த விளம்பர வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

இதை தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளத்தில் விமானத்தை தரையிறங்க ட்ரக் உதவியதாக ஒரு வதந்தி பரப்பப்படுகின்றன .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button