தீக்காயத்திற்கு கோதுமை மாவை பயன்படுத்தலாமா ?| மருத்துவரின் பதில்.

பரவிய செய்தி

#விழிப்புணர்வு……. சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.  தயவுசெய்து படிக்காமல் நீக்க வேண்டாம். சிறிது நேரம் முன்பு, நான் corn கொதிக்கவைத்தேன், சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் நனைத்தேன். வியட்நாமிய கால்நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் நான் வேதனையுடன் அலறும்போது, ​​என்னிடம் வீட்டில் (கோதுமை) மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன், அவர் என் கையை மாவில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

தீ மற்றும் சூடான நீரால் உண்டாகும் காயங்களுக்கு முதலுதவியாக கோதுமை மாவை பயன்படுத்தும் அறிவுரையை விழிப்புணர்வாகக் கூறி நீண்ட பதிவு சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் லைக், ஷேர்களை பெற்று வைரலாகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

Advertisement

Facebook link | archive link 

முழுமையான பதிவு, ” #விழிப்புணர்வு……. சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். * தயவுசெய்து படிக்காமல் நீக்க வேண்டாம். சிறிது நேரம் முன்பு, நான் corn கொதிக்க வைத்தேன், சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் நனைத்தேன்..!! வியட்நாமிய கால்நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அதனால் நான் வேதனையுடன் அலறும்போது, ​​என்னிடம் வீட்டில் (கோதுமை) மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன், அவர் என் கையை மாவில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார். வியட்நாமில் ஒரு பையன் ஒரு முறை எரிந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவர் மீது நெருப்பு மற்றும் பீதியுடன் யாரோ ஒருவர் தனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை. என் சொந்த விஷயத்தில், நான் 10 நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன், பின்னர் அதை அகற்றிவிட்டேன், அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் கூட நான் பார்க்க முடியவில்லை. மேலும், முற்றிலும் இல்லை.

இன்று நான் ஒரு பை கோதுமை மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன், நான் தீ படும் ஒவ்வொரு முறையும் மாவைப் பயன்படுத்துகிறேன். உண்மையில் குளிர்ந்த மாவு அறை வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் சிறந்தது. நான் ஒரு முறை என் நாக்கை சுட்டுகொண்டேன், அதன் மீது சுமார் 10 நிமிடங்கள் மாவு வைத்தேன் …. வலி நின்றுவிட்டது.
எனவே எப்போதும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்தபட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள். மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால், எரிந்த நோயாளிக்கு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் அது உதவுகிறது. உங்களுக்கு நன்மை பயக்கும் மதிப்பை யாராவது பகிர்ந்து கொள்ளும்போது, ​​அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு தார்மீகக் கடமை இருக்கிறது. எனவே இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் “.
உண்மை என்ன ? 

வியட்நாம் நாட்டின் கால்நடை மருத்துவரின் அறிவுரை என பரப்பப்படும் வைரல் பதிவு ஆங்கில மொழியில் வெளியான பதிவில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, இப்பதிவு 2011 ஆம் ஆண்டில் இருந்தே இணையத்தில் வைரலானப் பதிவு என்பதையும் எங்கள் தேடலில் அறிந்து கொள்ள முடிந்தது.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் கேட்ட போது, ” காயத்தின் அடிப்படையில் தீக்காயங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஃபர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி, தர்டு டிகிரி… ஃபர்ஸ்ட் டிகிரி என்பது நாம் சமையல் அறையில் சந்திக்கும் பொதுவான விசயம். அதுபோன்ற காயங்கள் வலியையும், சிவப்பு நிறத்தையும் ஏற்படுத்தும், ஆனால், அவை பொதுவாக எந்த வடுவும் இல்லாமல் தானாக சரியாகக்கூடியவை. ஒரு நபருக்கு இந்த வகையான தீக்காயங்கள் ஏற்படும் போது உடனடியாக 5 முதல் 10 நிமிடங்கள் தண்ணீரில் காண்பிக்க வேண்டும். அந்தப் பகுதி குளிர்ந்தவுடன் அது உலர்ந்து தானாகவே குணமாகும். அதில் நோய்த்தொற்றின் அறிகுறியே இல்லையே என்றால் எந்தவொரு கிரீம் அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ் தேவையில்லை. 2 டிகிரி மற்றும் 3 டிகிரி தீக்காயங்கள் தோலின் ஆழமான அடுக்கை பாதிக்கும், இதனால் வடு ஏற்படக்கூடும். இதுபோன்ற சம்பவங்களில், உடனடியாக தண்ணீரில் காயத்தைக் காட்ட வேண்டும் மற்றும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும்.

Advertisement

இதைத் தவிர மாவு, பேஸ்ட், வெண்ணை போன்ற பலவற்றை வீட்டு வைத்தியமாக பயன்படுத்தி வருகிறார்கள். அவை அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதால் பலர் பயன்படுத்துகின்றனர். எனினும், ஃபர்ஸ்ட் டிகிரி காயங்களுக்கு சிகிச்சை அளித்தாலும், அளிக்கவில்லை என்றாலும் வடு இல்லாமல் போகிறது, ஆனால், 2 மற்றும் 3 டிகிரி காயங்களுக்கு வடுக்கள் ஏற்படுகின்றன. 5 முதல் 10 நிமிடங்கள் காயத்தினைத் தண்ணீரில் காண்பிப்பது சிறிய தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவியாகும், கோதுமை மாவு அல்ல ” எனத் தெரிவித்து இருந்தார்.

தீக்காயங்கள் மீது கோதுமை மாவைப் பயன்படுத்துவது உகந்த செயல் இல்லை என்பதை மருத்துவரின் அறிவுரையின்படி தெரிந்து இருப்போம். மேலும், வியட்நாம் கால்நடை மருத்துவரின் அதிசயமான கோதுமை மாவு சிகிச்சை கதை 2011-ம் ஆண்டில் இருந்தே பல நாடுகளில் பரவிய ஒன்று. சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு குளிர்ந்த சாதாரண தண்ணீரைப் பயன்படுத்துவதே மருத்துவரின் அறிவுரை. சமூக வலைதளங்களில் பரவி கிடக்கும் ஆதாரமற்ற மற்றும் போலியான மருத்துவ ஆலோசனைகளை உண்மை என நினைத்து சோதித்து பார்க்க வேண்டாம்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, தீக்காயங்களுக்கு கோதுமை மாவைப் பயன்படுத்துமாறுக் கூறி வைரலாகும் நீண்டப் பதிவை அடிப்படையாக வைத்து யாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம் என அறிந்து கொள்ள முடிந்தது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button