மரத்தில் விலங்குகளின் உருவம் : இயற்கையாக உருவானதா ?

பரவிய செய்தி

பாம்பாக மாறும் அதிசய மரம். ஆந்திராவின் நல்கொண்டாவில் பாதுகாக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள காடு ஒன்றில் இயற்கையாகவே வளர்ந்து வரும் மரம் ஒன்று தன் வடிவத்தை விலங்குகளாக மாற்றிக் கொள்கிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், இது செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்று கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை.

மதிப்பீடு

சுருக்கம்

விலங்குகளின் வடிவம் இருக்கும் மரமானது ஆந்திராவின் காடுகளில் காணப்படுபவை அல்ல. அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் உள்ள Disney’s Animal Theme Park-ல் அமைந்துள்ளது.

விளக்கம்

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா காட்டில் பிரமாண்டமான மரம் ஒன்றில் விலங்குகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்றும், கலைநயமிக்க இந்த வேலைபாடுகள் மரத்தின் அடிப்பகுதியில் இருந்து உச்சி பகுதி வரை நிறைந்துள்ளன என்றும் வெளியான youtube-ல் வீடியோ பதிவு ஒன்று 40,000 பார்வைகளையும் கடந்து உள்ளது.

Mysteries Tree என்னும் இந்த மரம் பற்றி தமிழிலும் வெளியாகி வருகிறது. அதில், ஆந்திராவில் இருக்கும் மரம் என்றும், அவை பாம்பாக மாறுவதாகவும் வீடியோ வெளியிட்டு உள்ளனர். மேலும், அம்மரத்தில் விலங்குகளின் உருவம் இயற்கையாகவே உருவாகிறது செயற்கையாக உருவானதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tree of Life: 

அமெரிக்காவின் ஓர்லாண்டோ மாகாணத்தில் Walt Disney’s world உள்ளது. இங்கு அமைந்துள்ள Disney’s Animal Theme Park-ல் Tree of Life என்னும் 50 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மரத்தில் விலங்குகளின் உருவத்தை செதுக்கியுள்ளனர்.

Tree of Life பற்றிய கூடுதல் தகவல்கள் வீடியோவில்:

இந்த மரத்தில் குகை போன்ற பொந்துகள் அமைக்கப்பட்டு சிறிதாக நீர் அருவி கொட்டுவது போன்றும் வடிவமைத்துள்ளார்கள்.

இந்த பிரம்மாண்ட மரத்தில் 325 விலங்குகள், பறவைகள் உள்ளிடவையின் உருவத்தை அடிமரத்தில் இருந்து உச்சி பகுதி வரையில் செயற்கையாக செதுக்கி உள்ளனர். Tree of Life அப்பகுதியின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இந்த மரமே இயற்கையானது அல்ல. செயற்கையாக வடிவமைக்கப்பட்ட ஒன்று.

முடிவு :

அமெரிக்காவில் உள்ள Tree of Life செயற்கை மரத்தை ஆந்திரா, தெலுங்கானா காடுகளில் இருக்கும் மரம், இயற்கையாக உருவானது என்றெல்லாம் தவறான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button