பாஜக ஆளும் மாநிலத்தில் போடப்பட்ட சாலையை தமிழ்நாடு எனப் பரப்பும் தமிழக பாஜகவினர் !

பரவிய செய்தி

ரோடு போட்டோம்ங்கற பேருல மக்களோட வரி பணத்தை எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க. திராவிட மாடல்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கிராமப்புற பகுதியில் சாலை அமைக்கும் போது மரங்களை அகற்றாமல் அல்லது அதை சுற்றி சாலை அமைக்காமல் மரங்களோடு சேர்த்து சாலை அமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என தமிழக பாஜக உடைய இளைஞரணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பானு மோகன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பாஜக ஆதரவாளர்கள் பலரும் இப்படத்தை தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள்.

Archive link 

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் போடப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சில நாட்களுக்கு முன்பாக Punjabi University Patiala Confessions எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. 

Facebook link 

இப்புகைப்படம் பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கேலி செய்யும் விதத்திலும் பல்வேறு பதிவுகள் வெளியாகி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

ஆகையால், மேற்கொண்டு தேடுகையில், ” 2018 டிசம்பரில் ஜாக்ரன், நியூஸ் 18 இந்தி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

செய்தியின்படி, ” ஹரியானா மாநிலத்தின் ஃபதேகாபாத் மாவட்டத்தில் ஷேகுபூர் தாதுளி மற்றும் பனவாளி கிராமங்களுக்கு இடையே பொதுப்பணித்துறையால் போடப்பட்ட சாலையானது பல மரங்களை அகற்றாமல் போடப்பட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது.

சாலை நடுவே மரங்கள் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, இச்சம்பவம் பொதுப்பணித்துறையினரின் கவனத்திற்கு சென்றது.

இந்த சாலை அமைப்பதற்கு முன்பாக மரங்களை அகற்றுவது தொடர்பாக வனத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கும் முன்பாகவே உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்தாரர் சாலையை அமைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற் பொறியாளர் தெரிவித்து இருந்ததாக ” செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader