தேசியக் கொடி போன்று “மூவர்ணத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்” எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

பரவிய செய்தி

வந்தே பாரத் ரயிலை தேசியக் கொடியை போன்று மூன்று வர்ணத்தில் தயார் செய்திருக்கிறார்கள் ஆனால் இந்த திராவிடியாக்கள் காவி நிறத்தை மட்டும் பார்த்துட்டு ரயில்வே காவிமயமாக்கப்படுகிறது என்று பொய் பரப்பிட்டு இருந்தானுங்க.

Archive Link

மதிப்பீடு

விளக்கம்

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலின் சேவையானது முதலில் புதுடெல்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கியது. இதனையடுத்து வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்திய மூவர்ணக்கொடியை உதாரணமாகக் கொண்டு காவி நிறத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் தான் வந்தே பாரத் ரயிலை தேசியக் கொடியை போன்று மூன்று வர்ணத்தில் தயார் செய்திருக்கிறார்கள் என்றும், பச்சை நிற எங்கே என சமுக ஊடகங்களில் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது பச்சை நிறத்திலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாகச் சொல்லி  0:16 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் 0:10- ஆவது  நிமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் அணிந்திருக்கும் தலைகவசம் பச்சை நிறத்தில் மாறியதை பார்க்க முடிகிறது. இதனைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம்.

இதன் முழு வீடியோவை (valsad_vasi மற்றும் kem_cho_valsad_) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி பதிவிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. மேற்கொண்டு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில், இது ஒரு மீடியா ஏஜென்சி (Media Agency) என சுயவிவரத்தில் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது. 

அப்பதிவில், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உண்மை. பச்சை நிற வந்தே பாரத் ரயில் என்பது ஆரஞ்சு நிறத்தின் திருத்தப்பட்ட பதிப்பாகும் அதாவது, எடிட் செய்யப்பட்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதிலிருந்து வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள ரயில்கள் உண்மையானவை. ஆரஞ்சு நிறத்தில் உள்ள ரயிலையே பச்சை நிறத்தில் எடிட் செய்துள்ளனர் எனத் தெளிவாகக் தெரிகிறது.

இதுமாதிரியான பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றனர்.  அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மை அறிந்து அப்போதே யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது

முடிவு : 

நம் தேடலில், பச்சை நிறத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக பரப்பப்படும் வீடியோ உண்மையானது அல்ல.  எடிட் செய்யப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader