இந்து மதத்தின் ரசிகன் என ட்ரம்ப் கூறியதை ஊடகங்கள் வெளியிடவில்லையா ?

பரவிய செய்தி

இந்து மதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அமெரிக்க அதிபர் இன்று சொன்னதை ஒ௫ ஊடகத்திலும் காட்டவில்லை. பிரிட்டிஸ் நியுஸ் தலைப்பு செய்தி.

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

ஐக்கிய அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் இந்து மதம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியதை இந்திய ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்ததாகவும், பிரிட்டிஷ் ஊடகம் அதனை வெளியிட்டு உள்ளதாகவும் ட்ரம்ப் பேசும் 30 நொடிகள் கொண்ட வீடியோ வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

வைரலாகும் வீடியோவில், ” நான் இந்துக்களின் மிகப்பெரிய ரசிகன், இந்தியாவின் மிகப் பெரிய ரசிகன்.. பெரிய பெரிய ரசிகன்.. நான் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியன் மற்றும் இந்து சமூதாய மக்கள் வெள்ளை மாளிகையில் நண்பர்களா இருப்போம் என்பதற்கு உத்திரவாதம் அளிப்பதாக ” மேடையில் பேசி இருப்பார்.

ஆக, ட்ரம்ப் அமெரிக்க அதிபரின் தேர்தலை குறிப்பிட்டு பேசுவதை அடிப்படையாக வைத்து வீடியோ எடுக்கப்பட்டது சமீபத்தில் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்து மதம் எனக்கு பிடிக்கும் என ட்ரம்ப் கூடியதை பிரிட்டிஷ் ஊடகம் வெளியிட்டு உள்ளதாக பகிர்ந்த வீடியோவின் வலதுபுற ஓரத்தில் yoyo என்ற சேனல் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

மேற்கொண்டு தேடுகையில், 2016 அக்டோபர் 16-ம் தேதி yoyo சேனலில் ” I am a Big Fan of Hindus Says Donald Trump ” என ட்ரம்ப் கலந்து கொண்டு பேசிய உரையின் முழு வீடியோ வெளியாகி இருக்கிறது. 

Advertisement

2016 அக்டோபர் 16-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் ” Donald trump says he’s a big fan of hindus ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், ”  ஒரு இந்திய-அமெரிக்க தொண்டு நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் தன்னை ” இந்துக்களின் பெரிய ரசிகர் ” என்று அறிவித்து, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். நியூஜெர்சியில் குடியரசு கட்சி இந்து கூட்டணி ஏற்பாடு செய்த பேரணியில் பேசிய ட்ரம்ப் இந்துக்களின் மிகப்பெரிய ரசிகன் எனத் தெரிவித்ததாக ” வெளியாகி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப் பேசிய உரையே தற்போது வைரலாகி இருக்கிறது. ட்ரம்ப் இந்துக்கள் மற்றும் இந்தியாவின் ரசிகன் என கூறியதை இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை எனக் கூறுவது தவறு.

2016-ல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இணையதளங்களில் அச்செய்தி இடம்பெற்று இருக்கிறது. மேலும், டொனால்ட் இந்த பேரணிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு மைனேயில் பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்களின் மற்றொரு பேரணியில் ” அமெரிக்காவை ஒரு கடவுளின் கீழ் ஒன்றிணைப்பேன் ” என்று அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் இந்துக்கள் மத்தியில் அப்படி பேசி இருக்கிறார் என இந்திய செய்தியில் வெளியாகி இருக்கிறது. 2019-ல் டொனால்ட் ட்ரம்ப் ” நான் துருக்கி அதிபரின் மிகப்பெரிய ரசிகன் ” என்றும் கூறி இருக்கிறார்.

நம்முடைய தேடலில், 2016-ல் அமெரிக்க தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள இந்து மக்களின் முன்னிலையில் பேசிய ட்ரம்ப் இந்து மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறிய வீடியோவை எடுத்து சமீபத்தில் கூறியதாக பரப்பி வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button