டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்த இந்தியர்| எங்கு ? எப்பொழுது ?

பரவிய செய்தி

இந்தியாவின் தந்தையே மோடிதான் : ட்ரம்ப் புகழாரம். அடுத்தநாள் வட இந்தியாவில் டிரம்ப் சாமி உருவாகிவிட்டார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் சிலை வழிபாடுகள்புதிது ஒன்றும் இல்லை. அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் என தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தும் நிகழ்வுகள் ஏராளமாக நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், பிற நாட்டின் தலைவருக்கு சிலை வைத்து பூஜை செய்வது புதிதாக அரங்கேறியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் அதிபர் பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என கூறிய பிறகு, வடஇந்தியாவில் டிரம்ப்க்கு சிலை வைத்து பூஜை செய்ய துவங்கிவிட்டதாக வீடியோ மற்றும் மீம் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ? 

அமெரிக்காவின் நியூயார்க்கில் நிகழ்ந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான சந்திப்பில் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில், இந்தியாவின் தந்தை என பிரதமர் மோடியை டொனால்டு டிரம்ப் கூறியதாக புதிய தலைமுறை செய்தியில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக, டிரம்ப் சிலை வைக்கப்பட்ட இடம் குறித்து தேசிய பொழுது, சிலை வைக்கப்பட்டது சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல, கடந்த ஆண்டிலேயே தொடங்கிய நிகழ்வு என தெரிந்து கொள்ள முடிந்தது.

Advertisement

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்த 32 வயதான புஸ்சா கிருஷ்ணா என்ற விவசாயி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பக்தராக வாழ்ந்து வருகிறார். 2019 ஜூன் 14-ம் தேதி ட்ரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி, அவர் தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைத்து தினமும் வழிபாடு செய்து வருவதாக ஜூன் 2019-ல் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

டிரம்புக்கு சிலை நிறுவப்படுவது தொடர்பாக தனது வீட்டிலேயே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். மேலும், சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள். அந்த வீடியோவே தற்பொழுது வைரலாகி வருகிறது.

தெலங்கானாவின் புஸ்சா கிருஷ்ணா அமெரிக்க அதிபர் ட்ரம்பை வழிபாடு கடந்த ஆண்டில் இருந்தே தொடங்கியுள்ளது. 2017-ல் அமெரிக்காவில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோல்ட்டா என்ற மென்பொருள் பொறியாளர் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க ஜனாதிபதியின் புகைப்படத்தை தன்னுடைய பூஜை அறையில் வைத்து தினம் வழிபட்டு வந்துள்ளார்.

Youtube link | Archived link  

எனது குடும்பம் மற்றும் கிராம மக்கள் என்னை பைத்தியம் என அழைக்கிறார்கள். ஒருமுறை என்னை மனநல மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுத்தினர். எனக்கு ஏதும் தேவையில்லை, நீங்கள் செல்லலாம், ஏனென்றால் அவர் என்னுடைய கடவுள் ” என ஆஸ்திரேலியன் 9 நியூஸ்-க்கு தெரிவித்து இருந்ததாக ஜூன் 2018-ல் Newsweek என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலின்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என புகழாரம் அளித்தது தொடர்பான செய்தி சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

ஆனால், டிரம்ப் பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய பிறகு வடஇந்தியாவில் டிரம்புக்கு சிலை அமைக்கப்படவில்லை.

2019 ஜூன் மாதம் புஸ்சா கிருஷ்ணா என்ற தெலங்கானா விவசாயி டிரம்புக்கு சிலை வைத்து உள்ளார். அதற்கு முன்பே தன் வீட்டு பூஜை அறையில் டிரம்ப் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button