This article is from Jan 17, 2022

குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !

பரவிய செய்தி

பிரதமர் மோடிஜி அவர்களை கிண்டல் செய்த குழந்தைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பால்வாடிகள் முன் போராட்டம் நடத்துவோம்.

Archive link

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடியின் மான்பைக் குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரம். பங்குபெற்ற குழந்தைகள், அதைப் பார்த்து சிரித்த நடிகை சினேகா, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அண்ணாமலை

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஜீ தொலைக்காட்சியில் நடைபெற்ற குழந்தைகள் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து, நையாண்டியாக குழந்தைகள் பேசிய வசனங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகியது. குழந்தைகளின் வீடியோ காட்சியை அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர்.

Twitter link  

இந்நிலையில், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், ” மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள் ” எனப் பதிவிட்டார்.

குழந்தைகளின் ரியாலிட்டி ஷோவிற்கு கூட பாஜக கண்டனமும், நடவடிக்கையும் எடுப்பதாக கூறுகிறது என எதிர் கருத்துக்களும், அண்ணாமலைக்கு எதிராக ட்ரோல் பதிவுகளும் பரவத் தொடங்கியது. அதேபோல், குழந்தைகளின் ஷோ குறித்து அண்ணாமலை கூறியதாக போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவினர் பால்வாடிகள் முன்பு போராட்டம் செய்யப் போவதாக பரப்பப்பட்ட ஏபிபி நாடு நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது. அதை அந்த செய்தி சேனலும் பதிவிட்டு இருக்கிறது.

Facebook link 

அதேபோல், வைரல் செய்யப்படும் தினமலர் உடைய நியூஸ் கார்டும் போலியாக எடிட் செய்யப்பட்டது. சமீபத்தில் தினமலர் முகநூல் பக்கத்தில் இதுபோன்ற டெம்ளேட் வடிவில் எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.

இதேபோல், பாரத பிரதமர் மோடிஜியை கிண்டல் செய்தால் அந்த சேனல் இருக்காது என அண்ணாமலை மிரட்டியதாகவும் கதிர் உடைய நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

Facebook link 

அந்த கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது எடிட் செய்யப்பட்டது என்றும், பாஜக தலைவர் அண்ணாமலை சபரிமலை சென்றது குறித்து வெளியான செய்தி என அறிய முடிந்தது.

முடிவு : 

நம் தேடலில், தனியார் தொலைக்காட்சியில் குழந்தை ரியாலிட்டி ஷோ தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக பல போலியான எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader