அமெரிக்காவில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்ததா ?

பரவிய செய்தி

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்துள்ளது. இந்த அற்புதமான தருணத்தை அங்குள்ள மக்கள் வீடியோ, படங்களின் மூலம் பதிவு செய்து மகிழ்ந்துள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வளிமண்டலத்தில் பனி படிகம் உருவாகி அதில் ஏற்படும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பால் தோன்றுகின்ற பிம்பமே மற்றொரு சூரியனைப் போன்று காட்சியளிக்கும்.

விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் சில பகுதிகளும், கனடாவிலும் இரு சூரியன்கள் உதித்ததை மக்கள் பார்த்துள்ளனர். இரு சூரியன்களின் அழகை பார்த்த மக்கள் வீடியோ, படங்கள் மூலம் பதிவு செய்துள்ளனர். அத்தகைய படங்கள் இணையங்களிலும், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றன.

Advertisement

அப்படியென்றால் உண்மையாகவே இரு சூரியன்கள் இருப்பது உண்மையா என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு சிலர் உலகம் அழியப் போகிறதா ? என்று அதிகப்படியான சிந்தனையில் உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இரண்டு சூரியன்கள் தோன்றியதாக கூறப்படும் நிகழ்வு வெறும் பிரதிபலிப்பு நிகழ்வே. வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால், சூரியனின் பிரதிபலிப்பால் பார்ப்பவர்களின் கண்களுக்கு இரண்டு சூரியன்கள் இருப்பது போல் தோன்றும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். சில சமயம் இவை குறிப்பிட்ட கோணத்தில் பக்கவாட்டிலும், சில சமயம் நேரெதிர்க் கோட்டிலும் தோன்றும். இந்நிகழ்வு ஒன்றும் புதிதாக நிகழ்வதில்லை, சூரியன் தோன்றிய காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

காற்றில் உள்ள பனி படிகங்களின் ஒளி பிரதிபலிப்பால் இரு சூரியன்களோ அல்லது அதற்கு மேற்பட்ட சூரியனாக காட்சியளிக்கும் நிகழ்விற்கு “ சன் டாக் “ என்று பெயர். இது மாதிரியான நிகழ்வு தான் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ந்துள்ளது. மேலும், 2011 ஆம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாக செய்திகளிலும், இணையங்களிலும் வெளியாகியுள்ளன.

சூரியனின் பிரதிபலிப்பால் தோன்றிய பிம்பத்தை கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டு படங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். ஆனால், பல இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் இரண்டு சூரியன்கள் தோன்றியது என்றும், உலக அழியப் போகிறது என்றும் புதுவிதக் கதைகளாய் எழுதி வருகின்றனர்.

Update :

Advertisement

Youtube link | archived link

2019 டிசம்பரில் சீனாவில் உள்ள லின்ஜியாங் பகுதியில் மூன்று சூரியன் தெரிந்த காட்சி அரங்கேறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வானில் பனித்துளிகளின் பிரதிபலிப்பால் மூன்று சூரியன் தெரிந்ததாக கூறியுள்ளனர்.

இதேபோல், 2016-ம் ஆண்டு தி டெலிகிராப் செய்தியில், ரஷ்யா நாட்டின் நகரத்தின் மீது மூன்று சூரியன்கள் தெரியும் காட்சி தென்பட்டதை ” rare optical illusion ” எனக் குறிப்பிட்டு வெளியிட்டு உள்ளனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button