இஸ்லாமியர் ஒருவரின் நான்கு மனைவிகள் சந்தித்த போது ஏற்பட்ட மோதல் எனத் தவறாகப் பரவும் லெபனான் வீடியோ!

பரவிய செய்தி
இஸ்லாமியர் ஒருவனின் நான்கு மனைவிகளும் முதன்முதலாக சந்தித்து கொண்டார்கள். இதனால் தான் “பொது சிவில் சட்டம்” கேட்கிறோம். This is why UCC is required.
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய அரசு சமீபத்தில் “இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு போன்றவற்றிற்கு தனித்தனியான சட்டங்கள் உள்ளன. எனவே குடிமக்கள் அனைவரும் சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்ற வேண்டும்” என்று கூறி “பொது சிவில் சட்டத்தை” இயற்றப்போவதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவரின் நான்கு மனைவிகள் முதன் முதலாக சந்தித்துக் கொள்ளும் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக குழந்தைகளுக்கு மத்தியில் அவர்கள் அடித்து சண்டை போட்டுக்கொள்வதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அதில் “இதனால் தான் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கட்டாயம் வேண்டும் என்கிறோம்.“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Meeting of Wife No.1, Wife No.2, Wife No.3 and Wife No.4. This is why UCC is urgently required. pic.twitter.com/poIHigLa0B
— Rakesh Krishnan Simha (@ByRakeshSimha) June 29, 2023
O my Ola 😳😳🤔🤔
That’s what happened when….
Wife no.1,
Wife no.2,
Wife no.3 and
Wife no.4met together after a long time💥😱💣💥
This is why UCC is required😉😝
शुभरात्री दोस्तो 👍🚩🌺🔱#UCC_Is_Need_Of_The_Hour pic.twitter.com/LExcgGyb7l
— Rishi Dr. (@rishi_dr119) June 30, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவை லெபனான் நாட்டைச் சேர்ந்த Lebanon 24 என்னும் ஊடகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் 15 அன்று பதிவு செய்திருந்ததை காண முடிந்தது.
அதில் “வடக்கே அமைந்துள்ள பள்ளியில் தாய்மார்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள்” என்று குறிப்பிட்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு இருந்தது.
اشكال بين الامهات في احدى المدارس في الشمال pic.twitter.com/nSlIuMmjBf
— Lebanon 24 (@Lebanon24) June 15, 2023
இது குறித்து மேலும் தேடியதில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து Akhbaralaan எனும் அரேபிய ஊடகம் தன்னுடைய இணையதளத்தில் கடந்த ஜூன் 16 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் “லெபனான் நாட்டின் திரிபோலி நகரில் அமைந்துள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் தாய்மார்கள் சண்டையில் ஈடுபட்டது தொடர்பான ஒரு காணொளி வைரலாகப் பரவி வருகிறது. சாமாதானம் நிலவ வேண்டிய பாடசாலையில் இப்படி சண்டைகள் நிலவுவது நல்லதல்ல. குழந்தைகளுக்கு அவர்கள் தான் முன்மாதிரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று Life என்னும் அரேபிய ஊடகமும் இந்த வீடியோ லெபனாலில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அதில் “யாராலும் தடுக்க முடியாத நிலையில், லெபனானின் பள்ளி முற்றம் ஒன்று மல்யுத்த அரங்காக மாறியதால், பல தாய்மார்கள் தங்கள் கைக்குழந்தைகளை சுமந்துகொண்டே, மற்றவர்களுடன் அடிதடியில் ஈடுபட்டதை வீடியோ காட்டுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவரின் நான்கு மனைவிகள் குழந்தைகளுக்கு மத்தியில் அடித்து சண்டை போட்டுக்கொள்வதாகப் பரவும் வீடியோ தவறானவை என்பதையும், இது லெபனான் நாட்டிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.