This article is from Sep 28, 2018

செல்போன்களில் திடீரென சேமிக்கப்பட்ட UIDAI எண்: ஹக்கர்கள் சதியா ?

பரவிய செய்தி

இந்தியாவில் செல்போன் பயன்படுபவர்களின் காண்டாக்ட் லிஸ்ட் இல் தானாக UIDAI என்ற எண் சேமிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஹக்கர்கள் உங்களின் செல்போனில் உள்ள தரவுகளை திருட முடியும். உடனடியாக அந்த எண்ணை டெலிட் செய்ய அனைவருக்கும் தெரிவியுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

UIDAI என்ற ஆதார் சேவை மைய உதவி எண்ணை தவறுதலாக அனைவரது செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

விளக்கம்

இந்தியா முழுவதும் ஓரிரு நாட்களில் செல்போன் பயன்படுத்துபவர்களின் காண்டாக்ட் லிஸ்டில் திடீரென UIDAI என்ற பெயரில் “ 18003001947 “ என்ற எண் சேமிக்கப்பட்டு அனைவருக்கும் ஒருவித அச்சத்தை தூண்டியது. தாமாகவே UIDAI எண் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்கப்பட்டதால் ஹக்கர்களின் சதி வேலை என்ற செய்தி பரவத்துவங்கியது.

1800 OR 1600 என்று தொடங்கும் எண்கள் UIDAI என்னும் பெயரில் காண்டாக்ட் லிஸ்ட் இல் தானாக சேமிக்கப்பட்டு உள்ளது. இவை SPAM எண்கள் உடனடியாக டெலிட் செய்யுங்கள் என மகாராஷ்டிரா குற்றவியல் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது என்று வாட்ஸ் ஆஃப்பில் வதந்திகள் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதிலும் உள்ள செல்போன் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்கப்பட்ட UIDAI “ 18003001947 “ என்பவை ஆதார் சேவை மைய உதவிக்கான இலவச எண்கள். எனினும் இந்த எங்கள் செயலற்று உள்ளன. இதற்கு பதில் அளித்த ஆதார் சேவை மையம், மர்மமான முறையில் இந்த எண்கள் சேமிக்கப்பட்டு உள்ளதாக கூறியது.

” சர்ச்சைகளை அடுத்து UIDAI எண்ணை கூகுள் நிறுவனம் அனைவரது காண்டாக்ட் லிஸ்டில் முன் அறிவிப்பு ஏதுமின்றி சேமித்து உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது. அதில்,  ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக ஆதார் உதவி மையம் இலவச அழைப்பு எண் கோடிங் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், 2014-ல் வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் தளத்தில் இருந்தது மட்டுமல்லாமல் புதிய சாதனத்திலும் அப்டேட் ஆகி உள்ளது “.

ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் பயனாளர்களின் செல்போன்களிலும் UIDAI எண்கள் சேமிக்கப்பட்டு உள்ளன. இந்த தவறை சரி செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும், புதிய அப்டேட் செல்போன் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்து உள்ளது.

எனவே, UIDAI எண்கள் மூலம் தரவுகளை திருட ஹக்கர்கள் செய்த வேலை என வீண் வதந்திகள் வாட்ஸ் ஆஃப் மூலம் பரவுவதை பகிராமல் மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader