உக்ரைனில் போலியான பிணங்கள் எனத் தவறாக பரவும் பழைய போராட்ட வீடியோ!

பரவிய செய்தி

உக்ரைன் பிணங்களுக்கு உயிர் கொடுத்த ஊடகம்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

உக்ரைன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் போலியான பிணங்களை செய்திகளில் காண்பிக்கப்படுவதாக, தொலைக்காட்சி செய்தியின் போது வரிசையாக கருப்பு உறைகளுக்குள் பிணங்கள் இருப்பது போன்று வைக்கப்பட்டு இருக்கும் போது ஒரு உறையில் இருந்து ஒருவர் வெளியே வருவதும், அதை ஒருவர் மீண்டும் மூடி வைக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Archive link 

உண்மை என்ன ?  

வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் ” Wien: Demo gegen Klimapolitik ” எனும் தலைப்பை வைத்து தேடிப் பார்கையில், ” 2022 பிப்ரவரி 4-ம் தேதி oe24TV எனும் சேனலில் முழுமையான வீடியோ பதிவாகி இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்பாகவே இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது .

பிப்ரவரி 4-ம் தேதி ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஃப்ரைடே ஆப் ஃப்யூச்சர் ஆஸ்திரியா அணியைச் சேர்ந்த 49 போராட்டக்காரர்கள் இறந்தவர்கள் போல் வரிசையாக படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Twitter link  

முடிவு : 

நம் தேடலில், உக்ரைன் தாக்குதலில் இறந்தவர்களை போன்று போலியான பிணங்கள் வைக்கப்பட்டது ஊடகத்தில் வெளியாகியதாக பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ உக்ரைன் நாட்டைச் சேர்ந்தது அல்ல. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பாக ஆஸ்திரியாவில் நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
Please complete the required fields.
ஆதாரம்

Back to top button