உக்ரைனில் சிக்கியதாகப் போலி வீடியோ வெளியிட்ட உ.பியைச் சேர்ந்த பெண் கைதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் இந்திய அரசின் தாமதம் பல்வேறு கண்டனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பெற்று வருகிறது. தற்போது தொடர்ந்து மாணவர்களை மீட்கும் பணியில் செயல்படுவதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்க வந்து போரில் சிக்கியுள்ளதாகவும், தன்னை மீட்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வைரலான போலியான வீடியோவை வெளியிட்ட வைஷாலி யாதவ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கைது. அவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் 2011 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் என நியூஸ் கார்டு வடிவிலான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
மாணவி வைஷாலி உக்ரைனில் சிக்கி உள்ளதாக வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், அவர் இந்தியாவில் இருக்கிறார், அவரின் தந்தை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தலைவர் என்றும், வைஷா போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பரவும் பதிவுகளையும் பார்க்க முடிந்தது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் செய்தி குறித்து தேடுகையில், Khanzar sutra எனும் முகநூல் பக்கத்தில், ” வைஷாலி கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் போலியானது. அவர் தற்போது ரோமானியாவில் உள்ளார். வைஷாலி கைது செய்யப்பட்டதாக கூறுவது போன்று எந்த நிகழ்வும் நடக்கவில்லை என ஹர்தோய் பகுதி எஸ்.பி ராஜேஷ் திவேதி பேசும் வீடியோ மற்றும் வைஷாலி பேசும் வீடியோ இணைத்து பகிரப்பட்டு இருக்கிறது.
हरदोई पुलिस ने स्पष्ट किया है कि, लड़की ने मदद मांगी थी, वह इस वक्त रोमानिया में है, ट्वीट डिलिट करके भागिएगा मत । ये हरदोई के पुलिस कप्तान हैं सुन लीजिए क्या कह रहे हैं । BJP के लोगों ने फर्जी खबर प्लांट करवाई, लड़की का मामला फर्जी नहीं उसको मदद की दरकार है । #IndiansInUkraine https://t.co/4ZmzhaF7R6 pic.twitter.com/3rqFo8jMqX
— Raja Pal (@Rraja_pal) March 2, 2022
அதுமட்டுமின்றி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ராஜா ட்விட்டரில், வைஷாலி கைது செய்யப்பட்டதாக போலியான செய்தி பரப்பப்பட்டு வருகிறது என எஸ்.பி ராஜேஷ் திவேதி பேசும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
वैशाली यादव ने भारत से वीडियो नहीं बनाया. वो ग्राम प्रधान हैं, लेकिन यूक्रेन से मेडिकल की पढ़ाई कर रही हैं. सरकार से मदद मांगने के लिए वीडियो बनाया था. वो अब रोमानिया पहुंच चुकी हैं, जल्द भारत लौटेंगी. @QuintHindi @QuintFactCheck pic.twitter.com/njrp0soNPW
— siddharth sarathe (@siddharthsarat5) March 2, 2022
” வைஷாலி யாதவ் இந்தியாவில் இருந்து கொண்டு வீடியோ எடுக்கவில்லை. அவர் ஒரு கிராமத் தலைவர். இருப்பினும், உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார். அரசாங்கத்திடம் உதவி கேட்கும் வகையில் அவர் வீடியோ வெளியிட்டார். தற்போது ருமேனியா சென்றுள்ள அவர் விரைவில் இந்தியா திரும்புவார் ” என வைஷாலி பேசும் மற்றொரு வீடியோ உடன் குயின்ட் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
உக்ரைனில் படிக்க சென்ற மாணவர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவர்கள் மீது வன்மம் நிறைந்த பதிவுகள் அதிகம் வெளியாகின்றன. எல்லைப் பகுதிகளில் இருந்து உதவி கேட்டு மாணவர்கள் வீடியோக்கள் வெளியிட்டாலும் அதற்கும் இங்குள்ள சில குழுக்கள் எதிர்வினையாற்றுவதும், போலிச் செய்தியை பரப்புவதுமாக உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், உக்ரைனில் சிக்கி இருப்பது போன்று போலி வீடியோ வெளியிட்ட உத்தரப்பிரதேச பெண் வைஷாலி கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தியே. அவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார், இந்தியாவில் இல்லை. போர் சூழலால் ருமேனியா நாட்டிற்கு சென்றுள்ளார் என அறிய முடிகிறது.