This article is from Feb 28, 2022

உக்ரைன் மாணவர்கள் மீட்பு பேருந்தில் எடிட் செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பி வருவதற்கு உண்டாகும் பயண செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். எனினும், உக்ரைனில் இருந்து இந்திய அரசாங்கம் மாணவர்களை மீட்டு வருவதாகவும், அதற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்து இருந்தது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் பணியின் போது மாணவர்கள் பயணிக்கும் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் முதல்வர் ஸ்டாலினின் ஸ்டிக்கர் இடம்பெற்ற புகைப்படத்தை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

 

உக்ரைன் மாணவர்களை மீட்கும் பணியில் பேருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடுகையில், ” பிப்ரவரி 24-ம் தேதி தி இந்துவில் உக்ரைன் மாணவர்கள் தொடர்பாக வெளியான செய்தியில் ஸ்டாலினின் ஸ்டிக்கர் இல்லாத புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அந்த பேருந்து புகைப்படத்தில், இந்திய தேசியக் கொடி, Indian Students on Board மற்றும் பயணம் தொடர்பான ஆவணம் ஒன்றும் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த ஆவணம் ஒட்டப்பட்ட இடத்தில் மு.க.ஸ்டாலின், கலைஞர் புகைப்படத்தை எடிட் செய்து இருக்கிறார்கள். எனினும், இதை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை.

முடிவு :

நம் தேடலில், உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்களை மீட்கும் பேருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader