மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் எனப் பரவும் தந்தி டிவியின் பழைய கருத்துக் கணிப்பு !

பரவிய செய்தி
ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் !!
மதிப்பீடு
விளக்கம்
மத்தியில் ஆட்சி மாற்றத்தை இந்தியர்கள் விரும்புவதாகக் கூறி தந்தி டிவி சேனலில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கார்டில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா ? என்ற கேள்விக்கு 71% பேர் வேண்டும்,13% பேர் வேண்டாம், 16% பேர் பின்னர் முடிவு செய்யலாம் என பதில் அளித்து உள்ளதாக இடம்பெற்று இருக்கிறது. அதன் கீழ் இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் கார்டில் உள்ள “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா ?” எனும் வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், 2018ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தந்திடிவியின் ட்விட்டர் பக்கத்தில் இக்கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
#ThanthiTVOpinionPoll : மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமா?#Centre | #MakkalYaarPakkam | @KrishInfoMedia pic.twitter.com/A1sLVfJW9f
— Thanthi TV (@ThanthiTV) November 19, 2018
2018ம் ஆண்டு தந்தி டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு படத்தை தற்போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பி வருகின்றனர்.
2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும், 24 இடங்களையும் பெற்று இருந்தது.
மேலும் படிக்க : டிவி ஸ்டிக்கரை பார்க்காமல் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பை திட்டி கிண்டலுக்குள்ளாகும் பதிவுகள் !
மேலும் படிக்க : நல்லாட்சி வழங்கிய அரசு அதிமுக என பரப்பப்படும் பழைய கருத்துக் கணிப்பு !
இதற்கு முன்பாக, பழைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாகப் பரப்பப்பட்டது குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக பரப்பப்படும் தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவின் கார்டானது கடந்த 2018ல் வெளியிடப்பட்ட பழைய கருத்துக் கணிப்பு என்பதை அறிய முடிகிறது.