விசித்திரமான விலங்கால் குடும்பமே பலியா ?

பரவிய செய்தி

கேரளாவில் மங்களூர் என்ற காட்டில் இருந்து ஒரு அபூர்வான விலங்கு வீட்டில் இருந்த நான்கு பேரை கொன்று விட்டது.

மதிப்பீடு

சுருக்கம்

2018-ல் சத்தீஸ்கரில் கொடூரமான கொலை செய்யப்பட்ட குடும்பத்தின் புகைப்படத்தை விசித்திரமான விலங்கால் கொல்லப்பட்டவர்கள் என வதந்தியை பரப்பி வருகின்றனர்.

விளக்கம்

கேரள மாநிலத்தில் மங்களூர் வனத்தில் இருந்து வந்த ஓர் அபூர்வமான விலங்கால் ஒரே குடும்பத்தில் இருந்த நான்கு பேர் இறந்துள்ளனர் என இப்படங்கள் வாட்ஸ் ஆஃப்களில் பகிரப்பட்டு வருகிறது. விசித்திரமான விசயங்கள் என்றால் சமூக வலைதளங்களில் உண்மை என நம்பப்பட்டு அதிகம் வைரலாகி விடும்.

Advertisement

தமிழில் பரவியது போன்றே ஹிந்தி மொழியிலும் இதே படங்கள் வட இந்தியாவில் பரவி இருந்தது. அதில், Goatman எனும் விசித்திரமான ஆட்டு மனிதன் குடும்பத்தில் இருந்த அனைவரையும் கொன்று விட்டதாக பரவி அச்சத்தை ஏற்படுத்தியது.

இறந்தவர்களின் படம் :

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுன்த் என்ற பகுதியில் வசித்து வந்த ANM யோக மாயா சாஹு, அவரின் கணவர் சேடன் சாஹு, அவர்களின் இரு குழந்தைகள் கொடூரமான முறையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொல்லப்பட்டனர். 2018 மே மாதத்தில் இக்கொலை நடந்துள்ளது.

முதலில் கொள்ளை சம்பவத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்தவர் மற்றும் கொலைக்கான காரணத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

Advertisement

யோக மாயா சாஹு வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த தர்மேந்திரா என்பவர் குழாய்கள் சரி செய்யும் பணியை செய்து தருபவர். சிறிய வேலைகள் இருந்தால் யோக மாயா சாஹு வீட்டிற்கு வந்து செய்து விட்டு செல்வார். இதேபோன்று ஒருமுறை குழாய்கள் சரி செய்து விட்டு பணம் கேட்டதற்கு பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். பலமுறை பணத்தை கேட்டு தராததால் தர்மேந்திரா கோபடைந்து உள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பமும் அவரை திட்டி அவமானப்படுத்தியதாக செய்தியில் வெளியாகியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த தர்மேந்திரா அவர்களின் வீட்டில் திருடலாம் என நினைத்து இருந்த போது தன் யோசனையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து யோக மாயா சாஹு, அவரின் கணவர் மற்றும் இரு மகன்களையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்றுள்ளான்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் கிடக்கும் புகைப்படமே இது.

Goatman : 

இணையத்தில் goatman என தேடித் பார்த்தால் இப்புகைப்படங்களை பார்க்கலாம். Goatman நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் பாதி மனிதன், பாதி ஆட்டின் உருவம் கொண்ட மிருகம். Goatman பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது. அதனைப் பற்றி திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாகவே goatman பற்றி வதந்திகள் பரவி இருந்தன. தற்போது இந்தியாவிலும் உள்ளதாக வதந்தியை பரப்புகின்றனர்.

மேலும், வட இந்தியாவில் பரவிய செய்தியில் ஆட்டு மனிதனின் கால்கள் என இப்படமானது பகிரப்பட்டது. ஆனால், இப்படத்தில் இருப்பது ஒருவகையான சொறி(mange) நோயால் பாதிக்கப்பட்ட நாயின் கால்கள்.

பல்வேறு இடங்களில் கிடைத்த புகைப்படங்களை ஒன்றிணைத்து வதந்தியை பரப்பி உள்ளனர்.  விசித்திரமான விலங்கு நான்கு பேரைக் கொன்றதாகப் பரவும் செய்திகள் வதந்தியே என்பது தெளிவாக புரிந்து இருக்கும். செய்திகளை பகிரும் முன் குறைந்தபட்ச உறுதித்தன்மையை சரி செய்து பின் பகிரவும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button