உன்னாவ் மாவட்டத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எத்தனை ?

பரவிய செய்தி

11 மாதங்களில் 86 கற்பழிப்புகள், 185 பாலியல் துன்புறுத்தல்கள் பெண்கள் வாழ தகுதியற்ற மாவட்டமாக மாறியுள்ளது பாஜக ஆளும் உபி மாநிலத்தின் உன்னாவ் மாவட்டம்.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக புகார் அளித்த இளம்பெண் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு உன்னாவ் பகுதியின் மீது நாடு முழுவதிலும் கவனம் திரும்பி வருகிறது. இதற்கு முன்பாக, 2017-ல் ஆளும் பாஜக அரசின் எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு உன்னாவ் பகுதியை அனைவருக்கும் தெரிய வைத்தது.

Advertisement

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் உன்னாவ் மாவட்டத்தில் 86 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 185  பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வு முயற்சிகள் வழக்குகளும் பதிவாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புள்ளி விவரங்கள், உன்னாவ் மாவட்டம் பெண்கள் வாழத் தகுதி இல்லாத பகுதியாகவும் மற்றும் ஆளும் அரசின் மீது குற்றச்சாட்டுகளையும் உண்டாக்கியது.

Facebook link | archived link  

இதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில் , ” உன்னாவ் மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு 90 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது ” எனக் கூறியதாக வீடியோ ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், உன்னாவ் போலீஸ் தரப்பில், 90 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இல்லை 51 சம்பவங்கள் என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே டிவி-க்கு உன்னாவ் மாவட்ட எஸ்.பி விக்ராந்த் வீர் அளித்த பேட்டியில், ” உன்னாவ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஜனவரி 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையில் 51 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகி உள்ளன. 2018-ல் 64 வழக்குகளும் , 2017-ல் 54 வழக்குகளும், 2017-ல் 37 வழக்குகளும் மற்றும் 2015-ல் 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன ” எனத் தெரிவித்து இருந்தார்.

Advertisement

உன்னாவ் மாவட்ட காவல்துறை அளித்த தரவுகளின்படி, ” கடந்த 11 மாதங்களில் 51 பாலியல் வன்புணர்வு வழக்குகளும் , 185 பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு முயற்சி வழக்குகளும் பதிவாகி இருப்பதாக ” இந்திய டுடே மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

சில செய்திகளில் 86 வழக்குகள் என பதிவாகி இருக்கின்றன. பிரியங்கா காந்தி 90 வழக்குகள் எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், உன்னாவ் மாவட்டத்தின் எஸ்.பி 51 வழக்குகள் என பேட்டி அளித்துள்ளார்.

உன்னாவ் மாவட்டத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமை போன்று நாடு முழுவதிலும் நிகழ்கின்றன என்பதே உண்மை. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை தினமும் மக்களால் அறிய முடிகிறது.

2017-ல் இந்தியாவில் 33 ஆயிரத்து 658 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகி உள்ளதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்ததாகவும், சராசரியாக ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் எடுத்துரைப்பதாக பிபிசி கட்டுரையில் வெளியாகி இருக்கிறது.

இன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பேசும் பொழுது ஏதோ ஓரிடத்தில் ஓர் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார் என தரவுகள் நமக்கு எடுத்துரைக்கிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button