இவர் உபி முதல்வர் யோகியின் டீக்கடை நடத்தும் மூத்த சகோதரரா ?

பரவிய செய்தி
உபி முதல்வரின் மூத்த சகோதரர் இன்னும் விளக்கமில்லாத தேநீர் கடையில் இருந்து குறைந்த வருமானத்தில் பிழைத்து வருகிறார்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடைய மூத்த சகோதரர் தேநீர் கடையை நடந்தி குறைந்த வருமானத்திலும் பிழைத்து வருவதாகக் கூறி காவி துண்டு உடன் கடை முன்பு நிற்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் செய்யப்படும் பதிவுகளே கிடைத்தன. புகைப்படத்தில் இருப்பவர் யார் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.
ஆகையால், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடைய குடும்பம் பற்றி தேடுகையில், ” 2017-ம் ஆண்டில் ABP News சேனல் யோகி ஆதித்யநாத் குடும்பத்தை பேட்டி எடுத்த வீடியோ கிடைத்தது.
யோகி ஆதித்யநாத்திற்கு மாவேந்த்ர மோகன் என்ற மூத்த சகோதரரும், ஷைலேந்திர மற்றும் மகேந்திர மோகன் என இரு இளைய சகோதரர்களும் உள்ளனர். இதில், இந்திய ராணுவத்தில் சுபைதாராக பணியாற்றும் சைலேந்திர மோகன் இந்திய-சீனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியமர்த்தப்பட்டதாக 2017-ல் செய்திகள் வெளியாகியது.
மாவேந்த்ர மோகன் என்ற மூத்த சகோதரர் மற்றும் மகேந்திர மோகன் என்ற இளைய சகோதரரையும் வீடியோவில் காணலாம். இருவருமே வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ளவரை போன்று இல்லை.
இதற்கு முன்பாக 2019-ல் டீக்கடை நடத்தும் யோகி ஆதித்யநாத் சகோதரர் என வேறொரு புகைப்படம் இந்தியில் வைரலாகிய போது, ” யோகியின் சகோதரர்களில் யாருமே டீக்கடை நடத்தவில்லை என்றும், அவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர் ” என யோகி ஆதித்யநாத் சகோதரியின் கணவர் இந்தியா டுடேவிற்கு பதில் அளித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூத்த சகோதரர் தேநீர் கடை நடத்தி பிழைத்து வருவதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் யோகி ஆதித்யநாத் உடைய சகோதரர் அல்ல, அவரது சகோதரர்களில் யாரும் டீக்கடை நடத்தவில்லை என்பதையும் என அறிய முடிகிறது.