This article is from May 30, 2021

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வார்டை மாடு பார்வையிட்டதா ?

பரவிய செய்தி

உத்திரபிரதேச அமைச்சர் கொரோனா வார்டை பார்வையிடுகிறார்.

Facebook linkArchive link 

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுக்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதாக அதை வைத்து பல்வேறு விமர்சனங்களும், ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் செய்யப்படுவதுண்டு.

Facebook link 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கொரோனா வார்டில் மாடு ஒன்று சுற்றி பார்வையிடுவதாக 18 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை வைத்தும் ட்ரோல் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

உண்மை என்ன ?

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் சிகிச்சை பெற்று இருக்கும் சூழ்நிலையில், வைரலாகும் வீடியோவில் நோயாளிகளே காணவில்லை. ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர்.

கீ வார்த்தைகளை கொண்டு வீடியோ குறித்து தேடுகையில், 11 நாட்களுக்கு முன்பாக Tuko news எனும் கென்யா நாட்டின் செய்தி இணையதளம் ஒன்றில் இவ்வீடியோ பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் அளிக்கப்படவில்லை. மாறாக, Aproko Doctor என்பவர் இவ்வீடியோவை பதிவிட்டதாக இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | Archive link 

1 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட Aproko Doctor பிரபல நைஜீரியன் மருத்துவர். அவர் TedX Speaker என ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய பதிவிலும் எந்த பகுதியில் வீடியோ எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடவில்லை.

naija2day எனும் இணையதளத்தில், மருத்துவமனை வார்டில் மாடு நுழைந்த வீடியோ நைஜீரிய மக்களால் அதிகம் வைரல் செய்யப்படுவதாகவும், ஆனால் வீடியோ எடுக்கப்பட்ட இடம் எங்கு என உறுதியாக தெரியவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர். நைஜீரியாவை சேர்ந்த The Republican News எனும் முகநூல் பக்கத்திலும் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

மருத்துவமனை வார்டில் மாடு நுழையும் வீடியோ 10 நாட்களுக்கு முன்பாக நைஜீரியா நாட்டில் அதிகம் வைரலாகி இருக்கிறது. எனினும், வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தியா இல்லை எனத் தெளிவாய் தெரிகிறது. இவ்வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதாக செய்தியோ, பிற அதிகாரப்பூர்வ பதிவுகளோ இல்லை.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வார்டில் மாடு நுழைந்ததாக பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader