உத்தரப் பிரதேச அரசு “ஆரஞ்சு நிற ஹிஜாப்” தயாரிக்கும் பணியைத் தொடங்கியதா ?

பரவிய செய்தி

இருபக்கத்தினரின் பிரச்சனையைத் தீர்க்க உபி அரசு ஆரஞ்சு ஹிஜாபை தயாரிக்கும் பணியை தொடங்கி இருக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப், பர்தா அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்ந்து எதிர்ப்பை பெற்று வரும் நிலையில், இருபக்கத்தினரின் பிரச்சனையைத் தீர்க்க உத்தரப் பிரதேச அரசு ஆரஞ்சு நிற ஹிஜாபைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை. வைரல் செய்யப்படும் செய்தி குறித்து தேடுகையில், பிப்ரவரி 14-ம் தேதி ” The Fauxy ” இணையதளம் எனும்” Up Govt. To Start Production Of Orange Hijabs, Says It Solves Issue Of Both Sides “ எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Twitter link| Archive link 

“The Fauxy” ஆனது நையாண்டிக் கட்டுரைகளை வெளியிடும் இணையதளமாகும். அந்த இணையதளத்தின் Disclaimer பிரிவில், ” ஃபாக்சி ஒரு பொழுதுபோக்கு தளம். இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவே. ஃபாக்சியின் கட்டுரைகளை நேர்மையானவை மற்றும் உண்மையானவை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என வாசகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

முடிவு : 

உபி அரசு ஆரஞ்சு நிற ஹிஜாபை தயாரிக்கும் பணியை தொடங்கி இருக்கிறது எனப் பரவும் தகவல் தவறானது. தி ஃபாக்சி எனும் இணையதளம் வெளியிட்ட நையாண்டிக் கட்டுரையை உண்மையென என நினைத்து தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button