உ.பியில் கோவில் சிலைகளை உடைத்தது இந்து இளைஞர்கள்.. முஸ்லீம்கள் மீது பழிபோடும் வலதுசாரிகள்!

பரவிய செய்தி
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான நான்கு வெவ்வேறு கோவில்களில் 12க்கும் மேற்பட்ட வெவ்வேறு இந்து தெய்வங்களின் சிலைகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. அவர்கள் நம் கலாச்சாரத்தைத் தாக்குகிறார்கள், அவர்கள் எங்கள் கோயில்களைத் தாக்குகிறார்கள். அவர்கள் எங்கள் மகள்களைத் தாக்குகிறார்கள். இதற்கிடையில், நாங்கள் பின் இருக்கையில் அமர்ந்து எங்கள் அழிவு வெளிப்படுவதைப் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், இல்லையெனில் நாங்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், வகுப்புவாதம் மற்றும் பல முத்திரை குத்தப்படுவோம்!
மதிப்பீடு
விளக்கம்
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடந்த ஜூன் 01 அன்று நான்கு கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் விளைவாக அங்கிருந்த பல்வேறு இந்து தெய்வங்களின் 12 சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தன.
இதனையறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவில் வளாகத்திற்கு சீல் வைத்தனர். எனவே இந்த சம்பவத்திற்கு முஸ்லீம் மற்றும் ஜிகாதிகள் தான் காரணம் என்று கூறி கோவில்களை சேதப்படுத்திய இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் பரவலாகப் பரப்பி வருகின்றனர்.
More than 12 idols of Hindu deities were vandalized in Bulandshahr, UP across four different temples, reportedly over 100 years old, by unknown miscreants.
They are attacking our culture, They they area attacking our temples, what action have you took @Uppolice @bulandshahrpol pic.twitter.com/HlMwI6kVc1
— Dev Gaur (@devkrgaur) June 2, 2023
More than 12 different idols of Hindu deities were vandalized in Bulandshahr, Uttar Pradesh across four different temples, reportedly over 100 years old, by unknown miscreants.
They are attacking our culture, They they area attacking our temples, They are attacking our… pic.twitter.com/Sz27sYyolb
— BALA (@erbmjha) June 1, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சம்பவம் குறித்து புலந்த்ஷாஹர் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளதைக் காண முடிந்தது. அதில் கோவிலை சேதப்படுத்திய 4 பேரை கைது செய்துள்ளோம், அவர்களின் பெயர் ஹரிஷ், அஜய், சிவம், கேசவ் எனக் குறிப்பிட்டு அவர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
மேலும், அப்பதிவில் “கோவில் சிலைகளை சேதப்படுத்திய 4 குற்றவாளிகளை குலவதி (Gulavathi) காவல் நிலையம் கைது செய்துள்ளது.” என்று குறிப்பிட்டு, அந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையையும் இணைத்துள்ளனர்.
थाना गुलावठी पुलिस द्वारा मंदिरों की मूर्तियां को खंडित करने वाले 04 अभियुक्त गिरफ्तार।#UPPolice #BulandshahrPolice pic.twitter.com/z479Jzd8nE
— Bulandshahr Police (@bulandshahrpol) June 8, 2023
மேலும் இது தொடர்பாக Bulandshahr Police தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் “குலாவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ” என்று குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளதைக் காண முடிந்தது.
அதில் புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஷ்லோக் குமார் (SHLOK KUMAR) பேசுகையில் “அந்த கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இவர்கள் கோவிலை சேதப்படுத்தியுள்ளதைக் காண முடிந்தது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
थाना गुलावठी क्षेत्रान्तर्गत मंदिरों की मूर्तियां को खंडित करने वाले 04 अभियुक्तों की गिरफ्तारी के सम्बन्ध में वरिष्ठ पुलिस अधीक्षक की बाइट।@Uppolice @dgpup @adgzonemeerut @igrangemeerut pic.twitter.com/AHLch0hzJr
— Bulandshahr Police (@bulandshahrpol) June 8, 2023
மேலும் படிக்க: கேரளாவில் முஸ்லீம் நபர் யானைக்கு இறைச்சி கொடுத்ததாக பரப்பப்படும் வதந்தி வீடியோ!
இதற்கு முன்பும், வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லீம்களைக் குறிப்பிட்டு பரப்பப்பட்ட பல்வேறு பொய் செய்திகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்து பெண்ணின் இறந்த உடலை எடுத்துச் செல்லும் முஸ்லீம் காதலர் எனப் பரப்பப்படும் வதந்தி!
முடிவு:
நம் தேடலில், உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கோவிலை சேதப்படுத்தி, சிலைகளை உடைத்தது முஸ்லீம்கள் அல்ல. இந்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்துக்கள் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.