யோகி ஆதித்யநாத் பெண்ணின் இடுப்பைக் கிள்ளியதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், பெண் ஒருவரின் அருகே நிற்கும் யோகி ஆதித்யநாத் அவரின் இடுப்பைக் கிள்ளியதாகப் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இவரு தான் முற்றும் தொறந்த முனிவரு..இவரு கால்லே ரசினி விழுந்தா தப்பா?? pic.twitter.com/dTi5zwoJJZ
— cartoon sangam (@CartoonSangam) August 21, 2023
இவரு தான் முற்றும் தொறந்த முனிவரு..இவரு கால்லே ரசினி விழுந்தா தப்பா?? pic.twitter.com/ejjcqLKrUK
— பழஞ்சூர்.ARM.விக்னேஷ் பாஸ்கர் (@ARM62513644) August 22, 2023
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், உண்மையான புகைப்படத்தில் இருப்பவர் யோகி ஆதித்யநாத் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ததில், கடந்த 2021 மார்ச் 21 அன்று பரவி வரும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம், ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மேலும் அந்தப் புகைப்படத்தில் “தங்கமயமான மேற்கு வங்கத்தை உருவாக்குவதற்கான செயல்கள் நடைபெற்றுவருகின்றன” என்றும் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்காணும் புகைப்படத்தில் வலதுபுறத்தில் நிற்பவர் பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி. இவர் பாஜகவில் இணைந்து 2021 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு கட்சியில் இருந்து வெளியேறினார்.
இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021ல் பாஜக கட்சியின் கூட்டம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, எடிட் செய்து அதில் யோகி ஆதித்யநாத் நிற்பது போன்று தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகும் அடிபம்பில் தண்ணீர் குடிப்பதாகப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
இதற்கு முன்பும் யோகி ஆதித்யநாத் குறித்து பல செய்திகள் தவறாக பரவின. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாலியல் விவகாரத்தில் சிக்கியதாகப் பரவும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், யோகி ஆதித்யநாத் பெண் ஒருவரின் இடுப்பைக் கிள்ளுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.