அமெரிக்காவில் 100 கோடியில் கட்டப்பட்ட பாலாஜி கோவில் புகைப்படங்கள் உண்மையா ?

பரவிய செய்தி

100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் திருப்பதி ஏழுமலையார் வெங்கடாஜலபதி இந்து கோவில் நிறுவப்பட்டு இருக்கும் அழகை பாருங்கள்.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

Naresh Gowrisai என்ற முகநூல் பக்கத்தில், அமெரிக்காவில் 100 கோடி ரூபாயில் 125 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமையாருக்கு கட்டப்பட்ட கோவில் என பதிவான 10 புகைப்படங்களின் தொகுப்பு 11 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

Advertisement

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் பாலாஜி கோவில் எனும் இந்து ஆலயம் இருப்பது உண்மையே. ஆனால், வைரலாகும் புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கும் புகைப்படங்கள் தவறானவை. அவை எந்த கோவில்களுடையது என்பதையும், நியூ ஜெர்ஸியில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்து கோவில் குறித்தும் அறிய விரிவாக படிக்கவும்.

பிரான்ஸ் புகைப்படம் :

இந்து ஆலயம் என வைரலாகும் புகைப்படத் தொகுப்பில் இருக்கும் முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள Opéra de Paris உடைய புகைப்படம் என அறிந்து கொள்ள முடிந்தது.

Advertisement

Youtube video | archived link 

நியூ ஜெர்ஸி கோவில் : 

Youtube link | archived link

நியூ ஜெர்ஸி பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வர கோவில் குறித்து தேடிய பொழுது, நமக்கு கிடைத்த வீடியோவில் இருக்கும் கோவிலுக்கும் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் தோற்றத்திற்கும் தொடர்பில்லை என்பதை அறிய முடிகிறது.

ஆகாய பார்வையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்து தேடிய பொழுது 2015-ல் வெளியான வீடியோவின் thumbnail-ல் அதே புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதில், ” Aksharadham Biggest hindu temple in new jersey usa opening ” எனத் தலைப்பிட்டு இருந்தனர்.

அக்ஸ்ரதம் இந்து ஆலயம் : 

2013-ல் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் Bochasanvasi Akshar Purushottam Sansthan (BAPS) என்ற அமைப்பால் 162 ஏக்கர் நிலப்பரப்பில் அக்ஸ்ரதம் இந்து ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கின. காந்திநகர் மற்றும் நியூ டெல்லியில் உள்ள அக்ஸ்ரதம் கோவிலை போன்றே இக்கோவிலையும் வடிவமைக்க உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் 2014-ல் செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் மதிப்பு 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Youtube link | archived link

இந்து அமைப்பின் மூலம் நியூ ஜெர்ஸியில் உருவாக்கப்பட்ட அக்ஸ்ரதம் இந்து ஆலயத்தையே பாலாஜி கோவில் என குறிப்பிட்டு பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்திய கோவில்கள் : 

தங்கத்தில் இருக்கும் கோவில் பகுதிகள், அதனை சுத்தம் செய்யும் ஆட்கள் என இடம்பெற்று இருக்கும் 4 புகைப்படங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீபுரம் தங்க கோவிலைச் சேர்ந்தவை.

Youtube link | archived link 

தமிழ்நாட்டில் உள்ள பொற்கோவில் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. வேலூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலின் புகைப்படத்தை அமெரிக்காவில் உள்ள பாலாஜி கோவில் என நினைக்க வைத்துள்ளனர்.

இம்மூன்று புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில் இந்தியாவில் உள்ள ஒரே கோவிலைச் சேர்ந்தவை எனக் காண்பித்தன. மேலும், இந்த கோவிலின் மற்றொரு புகைப்படமும் நமக்கு கிடைத்தன. அதில், உள்நாட்டில் இருப்பது போன்று குடியிருப்பு பகுதிகளை காண முடிந்தது.

சில இணைய பதிவுகளில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிவன் கோவில் , சமணக் கோவில் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், கோவில் பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இந்த புகைப்படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையே.

நரசிம்ம அவதாரத்தில் இருக்கும் சிற்பம் இடம்பெற்று இருக்கும் கோவில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள cheeryal sri lakshmi narasimha swamy கோவில் என விவரங்கள் கிடைத்தன.

மலேசியா கோவில் : 

தங்கத்தில் மின்னுவது போன்று இருக்கும் தூண்களை கொண்ட கோவில் வளாகம் நியூ ஜெர்ஸியில் இல்லை. அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், 2018-ல் lankasee என்ற இணையதளத்தில் ” மலேசியாவின் தெற்கில் உள்ள ஜோகோர் பாரு என்ற இடத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் 1991-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது ” என கோவிலின் பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இக்கோவில் முழுக்க முழுக்க கண்ணாடியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து , அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பாலாஜி திருக்கோவில் இருப்பது உண்மையே. ஆனால், அக்கோவிலின் புகைப்படங்கள் என உலாவும் புகைப்படங்களின் தொகுப்பு வெவ்வேறு கோவில்களின் புகைப்படங்கள் என்பதை அறியமுடிகிறது .

நியூ ஜெர்ஸியில் பல கோடி ரூபாய் மதிப்பில் இந்து ஆலயம் கட்டப்பட்டு உள்ளதாக கூறும் தகவலும் உண்மையே. BAPS அமைப்பால் அக்ஸ்ரதம் இந்து கோவில் அழகாய் கட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள கோவில்களின் புகைப்படங்கள் மட்டுமின்றி மலேசிய கோவில், பிரான்ஸ் நாட்டின் கட்டிடம் என தவறான புகைப்படங்களின் தொகுப்பாக பரப்பி வருகின்றனர். பிற நாடுகளில் இந்து கோவில்கள் இருப்பது பெருமையாக இருந்தாலும், தவறான புகைப்படங்களை வைத்து பரப்பாமல் இருப்பது நல்லது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button