அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் வாசிக்கப்பட்டதாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் “ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம்” பாராயணம் செய்யப்பட்டதாகக் கூறி 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வெளிநாட்டினர் பலரும் கலந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடுகையில், 2018ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி MockingSkills எனும் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், குரோஷியாவில் 400க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களால் ஸ்ரீ ருத்ரம் சமகம் வாசிக்கப்பட்டது எனப் பதிவிடப்பட்டு உள்ளது.
Shri Rudra Chamakam performed by 400+ Europeans in Croatia. They are going to perform this in different places in Europe. pic.twitter.com/6bUXU3YdE6
— MockingSkills (@MockingSkills) April 19, 2018
மேலும், 2018ல் யூடியூப் சேனல் ஒன்றிலும் ‘Shri Rudram and Chamakam performed by 400+ Europeans’ எனும் தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
குரோஷியாவில் நடந்த ருத்ரம் சமகம் நிகழ்ச்சி குறித்து தேடுகையில், அனைத்து ஐரோப்பிய வேத மந்திரக் குழுக்களையும் இணைக்கும் vedaunion எனும் இணையதளத்தில் 2018 மார்ச் 3ம் தேதி நடந்த ருத்ரம் 11 நிகழ்ச்சி குறித்தும், நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த 2018ல் குரோஷியாவில் நடைபெற்ற ருத்ரம் சமகம் நிகழ்ச்சி என்பதை அறிய முடிகிறது.