Fact Check

சோசியல் மீடியாவில் மூவர்ணத்தில் Profile picture வைப்பது சட்டப்படி குற்றமா ?

பரவிய செய்தி

* சைபர் எச்சரிக்கை * தேசியக் கொடி போன்று உங்கள் முதல் எழுத்து உள்ள போட்டோ வைப்பது சட்டப்படி குற்றமாகும். கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தை துண்டு துண்டாக வைப்பது அரசு ஆணை சட்டத்திற்கு எதிராகும். இது மட்டும் இல்லாமல் இந்த போட்டோவை Profile photo ஆக வைப்பதால் ஹக்கர்ஸ் உங்கள் மொபைலை ஹக் செய்ய முடியும். அதில் அது போன்ற மென்பொருள் உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்திய தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்திற்கு பாதிப்பு இல்லாமல் அல்லது அவமதிக்காமல் பயன்படுத்தலாம் என புதிய flag code of India 2002 தெரிவிக்கின்றது.

விளக்கம்

இந்திய சுதந்திர தினம் நெருங்கும் நேரங்களில் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட ஆன்லைன் வலைத்தளங்களில் தங்களின் பெயரையோ அல்லது புகைப்படத்திலோ தேசியக் கொடியின் மூவர்ணத்தை வைப்பது இயல்பான ஒன்று. நாட்டின் மீது தாங்கள் வைத்து இருக்கும் பற்றை வெளிப்படுத்த இவ்வாறு செய்வதுண்டு.

Advertisement

ஆனால், சமீபத்தில் வாட்ஸ் ஆஃப் profile picture இல் மூவர்ணத்தில் பெயர்களின் முதல் எழுத்தை பலரும் வைத்து உள்ளனர். இது சட்டப்படி குற்றம் என்றும், அதில் ஹக் செய்வதற்கான மென்பொருள் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

” 1990-களில் அமெரிக்காவில் படித்து வளர்ந்த ஒருவர் இந்தியா வந்து Raigarh-ல் உள்ள தனது தந்தையின் தொழில் நிறுவனத்தில் தேசியக் கொடியை உயரப் பறக்கவிட்டுள்ளார். இதற்காக அவரின் மீது வழக்குகள் பதிவாகியது. காரணம், 2002-க்கு முன்பு வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் தவிர மற்ற நாட்களில் தனியார் இந்திய மக்கள் தேசியக் கொடியை பறக்க விடக் கூடாது என்று சட்டம் இருந்தது “.

தேசியக் கொடியைப் பயன்படுத்துவதில் இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1995 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு இந்தியர்கள் தேசியக் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக இருந்த கட்டுப்பாட்டை தளர்த்த முக்கிய காரணமாகினார்.

புதிதாக உருவாகிய Flag code of India 2002 சட்ட திருத்தங்களுக்கு காரணமாக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தொழிலதிபரான நவீன் ஜிண்டால் ஆவார். 

Flag foundation of India-வின் CEO கே.வி.சிங் கூறுகையில், “ சோசியல் மீடியாவில் பரவும் செய்திகள் தவறான தகவல்கள். Flag code of India 2002 முன்னாள் இருந்த அனைத்து சட்டங்களையும் மிஞ்சியது. மரியாதை செய்யும் விதத்தில் மூவர்ணத்தை பயன்படுத்துவதில் எந்தவொரு தடையும் இல்லை “ என்று கூறியுள்ளார்.

இந்தியக் கொடியின் மூவர்ணத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எவ்வாறு தவறான தகவலோ அதேபோல் அதில் ஹக் செய்யும் மென்பொருள் உள்ளது என்பதும் முற்றிலும் தவறான செய்திகள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button