வைரலாகும் மரத்தால் ஆன மின்கம்பத்தின் புகைப்படம் உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

உலகத் தரம் வாய்ந்த உத்திர பிரதேச மின்சார வாரியம்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மின்சார வாரியம் எனக் கூறி இரும்பிற்கு பதிலாக மரத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் மின்சாரக் கம்பத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து தேடுகையில், ” 2021 ஜூலை 19ம் தேதி டிவி குஜராத்தி சேனலில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மகேஷ் சவானி பாகிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்ட மின்கம்பத்தின் படத்தை குஜராத் எனத் தவறாகக் கூறி பதிவிட்டதாக ” செய்தியாக வெளியாகி இருக்கிறது.

2021 ஜூலை 8ம் தேதி Peaceful sukkur எனும் பாகிஸ்தானின் சிந்து பகுதியைச் சேர்ந்த முகநூல் பக்கத்தில், ” பாகிஸ்தானின் சிந்து பகுதியைக் குறிப்பிட்டு ” இப்புகைப்படம் பதிவாகி இருந்துள்ளது.

Facebook link 

இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளதா எனத் தேடுகையில், 2018ல் பாகிஸ்தானைச் சேர்ந்த டவுன் செய்தி தளத்தில், ” பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில் மரங்களை மின்கம்பங்களாக வைக்கப்பட்டு இருப்பதாக ” வேறு சில புகைப்படங்கள் உடன் செய்தி வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : உத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா ?

இதற்கு முன்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மரத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் டிரான்ஸ்ஃபார்மர் எனக் கூறி பிற நாடுகளில் பரவிய புகைப்படத்தை இங்கு வைரல் செய்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், உலகத் தரம் வாய்ந்த உத்தர பிரதேச மின்சார வாரியம் எனக் கூறி பரப்பப்படும் மரத்தால் ஆன மின்கம்பத்தின் புகைப்படம் தவறானது. அது பாகிஸ்தானின் சிந்து பகுதியைச் சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader