உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் இத்தாலி இரயிலின் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் தலைவர் டி.ரூபின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் ” எனக் கூறி இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அவரின் பதிவை தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் லைக் செய்தும் இருக்கிறார்.
உண்மை என்ன ?
பாஜகவினர் பகிர்ந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அதே மாதிரியான இரயிலின் வேறொரு புகைப்படம் 2022 மார்ச் 22ம் தேதி புகைப்பட விற்பனை தளமான Alamy-ல் வெளியாகி இருக்கிறது.
அதில், இத்தாலியின் வெனிஸில் உள்ள மெஸ்ட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரியின்(Nuovo Trasporto Viaggiatori-NTV) அதிவேக ரயில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பகிரப்படும் புகைப்படத்திலும் இரயிலின் முன்பாக NTV என எழுதப்பட்டு இருக்கிறது. நுவோ ட்ராஸ்போர்டோ வியாகியோடோரி(NTV) எனும் தனியார் நிறுவனம் இத்தாலி நாட்டில் அதிவேகமான இரயிலை இயக்கி வருகிறது.
உத்திரபிரதேசத்தின் லோக்கல் ரயில் pic.twitter.com/OkuHNUFBzM
— கு.அண்ணாமலை ஆர்மி 🇮🇳🇮🇳🚩🚩 (@KarthikGnath420) February 24, 2023
மேலும் படிக்க : குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !
இதற்கு முன்பாக, இதே பக்கத்தில் வெளியான நையாண்டிப் பதிவை பாஜகவினர் உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பியது குறிப்பிடத்தக்கது
முடிவு :
நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தின் லோக்கல் இரயில் எனப் பரப்பப்படும் புகைப்படம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் அதிவேக இரயில் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.